க. அரிஅரவேலன்
அன்புடையீர்;!
2004 பிப்ரவரி 8ஆம் நாளிட்ட தினமலர் இதழின் இது உங்கள் இடம் பகுதியில் “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!” என்னும் தலைப்பில் பரங்கிப்பேட்டை தமிழ்நாடு சமத்துவ சமுதாய இயக்க மாநிலப் பொருளாளர் டாக்டர் வி. ஆர். சோழராஜன் என்பவர் ஜனவரி 30ஆம் நாள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினரையும் பிறரையும் குறித்து எழுதிய கடிதத்திற்கு எதிர்வினையான கீழ்வரும் கடிதத்தை தினமலருக்கு எழுதினேன். அவர்கள் அவர்தம் இதழியல் அறத்திற்கு ஏற்ப இக்கடிதத்தை வெளியிடவில்லை. எனினும் இவ்வெதிர்வினை பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் திண்ணைக்கு அனுப்புகிறேன். வெளியிட்டு உதவ வேண்டுகிறேன். நன்றி!
தங்களின் உண்மையுள்ள,
அரிஅரவேலன்
—-
எதிர்வினை
2004 பிப்ரவரி 8ஆம் நாளிட்ட தினமலர் இதழின் இது உங்கள் இடம் பகுதியில் “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!” என்னும் தலைப்பில் பரங்கிப்பேட்டை தமிழ்நாடு சமத்துவ சமுதாய இயக்க மாநிலப் பொருளாளர் டாக்டர் வி. ஆர். சோழராஜன் என்பவர் ஜனவரி 30ஆம் நாள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினரையும் அதில் கலந்துகொண்ட பிறரையும் நோக்கி பின்வரும் வினாகளை எழுப்புகிறார:;
1. நாத்திகர்களான இவர்கள் ஏன் கருவறைப் போராட்டம் நடத்துகிறார்கள் ?
2. அனைத்து சாதியினரும் ஆகமம் படிக்க இவர்கள் ஏன் போராடுகிறார்கள் ?
3. பல்வேறு சாதிகளைச் சார்ந்த 63 நாயன்மார்களும் போராட்டம் நடத்திய கோவிலுக்குள் சென்றார்கள் ? அவர்களின் சிலைகளை பார்ப்பனர்கள் விழாகாலங்களில் ஊர்வலமாக தூக்கிவரவில்லையா ?
4. தமிழ் அர்ச்சனை ஏன் கேட்கிறீர்கள் ?
இவ்வினா ஒவ்வொன்றின் பின்பும் இருப்பது அறியாமையல்ல. அறியாமை போல வெளிப்படும் சாதிய ஆணவம். போராடுபவர்கள் நாத்திகர்கள்தான். கடவுள் இல்லை, கடவுளை நம்;புவன் காட்டுமிராண்டி, கடவுளைப் படைத்தவன் அயோக்கியன் என்னும் கருத்தில் எள்ளவும் மாற்றம் இல்லாதவர்கள்தான். அவர்கள் மனிதர் மனிதராக மதிக்கப்படவேண்டும், சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள், உரிமை மறுப்புகள் இருக்கக்கூடாது என்று நம்புவர்கள். இவர்களுக்கு இறைநம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இறைநம்பிக்கையுடைய எண்ணற்ற மனிதர்கள் தீண்டாமைக்கு ஆளாகும்பொழுது அவர்களின் சமத்துவத்திற்காக தன்னார்வலராக வந்து போராடுகிறார்கள். இது தவறு என்றால், அத்தவறினை திரும்பத் திரும்ப செய்ய தயங்காதவர்கள் அவர்கள்.
இறைமையின் எல்லாரும் சமம் என்றால், எல்லாருக்கும் ஆகமம் கற்கும் வாய்ப்பினை நல்கு என்றும் கோவில்களில் பணிநியமனம் செய் என்றும் சொல்வது எப்படி தவறாக முடியும் ? இக்கோரிக்கை இதுவரை எந்த பக்திப்பிழப்புகளும் கேட்காததால், அதற்காக போராடததால்தான் அந்நாத்திகர்கள்-அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொண்ட, அதனைச் செயல்படுத்த போராட்டாம் நடத்த தயங்காத- போராட முன்வருகின்றனர். சமத்துவசமுதாய இயக்கம் நடத்துபவருக்கு இது எப்படி புரியமல்போனது என்பதுதான் தெரியவில்லை.
இன்றைக்கு கோவில்களின் வெளிநடையில் வைக்கப்பட்டிருக்கும் நாயன்மார்களில் சில தாழ்த்தப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எப்படி நாயன்மார்கள் ஆனார்கள் என்பதனை நோக்கவேண்டும். அவர்கள் போராடித்தான் கோவிலின் உள்ளே போனார்கள், செத்தபிறகு. எடுத்துக்காட்டாக, நந்தன் கதையையே எடுத்துக்கொள்வோம். நந்தன் சிவன் கோவிலுக்குள் பக்தி மேலிட்டு நுழைய முயல்கிறான். கோவில்களில் மணியாட்டுவதும் பூஜைசெய்வதும், மந்திரங்கள் ஓதுவதுமே வேலையாகக் கொண்ட ஒருசாரார் அந்நந்தனை தீக்குள் இட்டுக்கொன்றனர் என்பதும் அதன்பின் அச்சாவை தங்களது இலாபத்திற்காக தெய்வீகச்செயலாய்த் திரித்தனர் என்பதும்தானே உண்மை. இன்றைக்கு பார்ப்பனர்கள் 63 நாயன்மார்கள் சிலைகளை சுமப்பது சமத்துவம் கருதியல்ல, சம்பாத்தியம் கருதி;த்தான் என்பது ஊரறிந்த உண்மை. அவர்கள் சமத்தும்நாடிகளாக இருந்தால் ஞானபீடம் என்னும் நாடகம்போட்ட மாலியைக் கூப்பிட்டு நகைச்சுவை நாடகம்போடு என மிரட்டியிருக்க மாட்டார்கள்.
எல்லாக் கோவில்களிலும், தமிழ்வழிபாடு கோட்டால் செய்யப்படுகிறது என்பதே தமிழ்நாட்டில் தமிழுக்கு இரண்டாம் இடம்தான் என்பதனை தெளிவுபடுத்தவில்லையா ? கிராமக்கோவில்களில் தமிழில்தானே வழிபாடு நடக்கிறது என்கிறார் டாக்டர். கிராமக்கோவில்கள் என்பதை இறந்துபோன முன்னோரின் சமாதிகள். அதனை கோவில்கள் என்று ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் வந்து அக்கோவில்களில் வழிபடத்தயாரா ? இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பலால் இக்கோவில்களிலும் சமஸ்கிருதம் பரவிவருவதை அறியாதவரா இச்சமத்துவ சமுதாயத்துகாரர் ? அந்நாத்திகர்கள் தமிழர்கள். இங்கிருக்கும் கோவில்களில் வழிபாட்டிற்கு செல்பவர்கள் தமிழர்கள். எனவேதான் தமிழ்நாட்டுக் கோவிலில் தமிழர் வழிபடும் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்து. கேட்டால்மட்டும் சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்து என தன்னார்வலராகப் போராடுகிறார்கள்.
மனிதர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்றுதான் பெரியார் திராவிடர் கழகம் முதலனா உண்மைப் பகுத்தறிவுவாதிகள் உண்மையான சமத்துவ சமுதாயம் காண இத்தகு இயக்கங்களைக் கட்டுகிறார்கள் என்பதனை பரங்கிப்பேட்டையிலிருந்து எழுதும் தமிழ்நாடு சமத்துவ( ?) சமுதாய இயக்க மாநிலப்பொருளாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
– க. அரிஅரவேலன், மதுரை
க. அரிஅரவேலன்
2 – 1142 அல்லிமலர் தெரு
எழில்நகர்
அய்யர்பங்களா
மதுரை 625 014
—-
kaariaravelan@rediffmail.com
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்