கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004


கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

போட்டி விபரங்கள்:

1) போட்டிக்கு அனுப்பப்படும் கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையாகவும், இதற்குமுன் பிரசுரிக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.

2) வளர்ந்த, வளரும், புதுமுக எழுத்தாளர்கள் யாவரும் இந்தப் போட்டியில் வித்தியாசமின்றி கலந்துகொள்ளலாம்.

3) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம்.

4) தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளின் பரிசு விபரங்கள்:

அ) முதல் பரிசு : கனடியடொலர் 300.00 ( இந்திய ரூ 10,000 ; இலங்கை ரூ 20,000)

ஆ) இரண்டாம் பரிசு : கனடிய டொலர் 200.00 ( இந்திய ரூ 6,666 ; இலங்கை ரூ 13,333)

இ) மூன்றாம் பரிசு : கனடிய டொலர் 100.00 ( இந்திய ரூ 3,333 ; இலங்கை ரூ 6,666)

5) தேர்வுக்குழுவின் முடிவு இறுதியானது.

6) போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:

Tamil Short Story Contest

16, Hampstead Court,

Markham, ON

L3R3S7

Canada

7) சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

8) போட்டியில் தேர்வு பெறாத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டா. தேவையான நகலை முன்பே எடுத்து வைத்திருப்பது நல்லது.

9) முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.

10) போட்டிக்கான படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004.

11) போட்டி முடிவுகள் 30, ஜூன் 2004 க்கு முன் அறிவிக்கப்படும்.

12) சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.

அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.

ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.

இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு.

amuttu@rogers.com

***

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts