அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

அகரம்.அமுதா



முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக

பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும்

நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக்

கல்வியென் மேலெரிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை

அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக்

கண்ணாடி போட்டபின்னும் ஹோம்வொர்க்செய் என்கறீங்க

என்னாங்க டீச்சர் இது!

விடிந்தால் டியூஷன்விட் டால்பள்ளிக் கூடம்

முடிந்து விளையாடப் போனா �படிங்கிற

வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறையக் கற்றிருக்காள்

ஆர்கிட்டச் சொல்லி அழ!

ஹோம்வெர்கை செய்து முடித்தவுடன் ஓடிப்போய்

கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா �வீம்போட

சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி

போரடிக்குதே வாழ்க்கை போ!


agramamutha08@gmail.com

Series Navigation

author

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

Similar Posts