அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அகரம்.அமுதா


ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;

ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய்

குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய்

சந்ததிகள் ஆயிடுச்சே தான்!

மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரர்

காக்கி டவுசரை கையினால் -தூக்கிப்

பிடித்தபடி, பேட்டுயரம் இல்லாப் பொடிசும்

அடிக்குமே சிக்சரை ஆர்த்து!

ஈரெட் டுவயதுமே ஆகாத போதும்வெண்

சீரெட்டு தேடும் சிறுசெல்லாம்! -பீரை

ஒளித்துக் குடிப்பதுடன் சைட்டும் அடிப்பார்கள்

கலிகாலம் ஈதென்றே காண்!


agramamutha08@gmail.com

Series Navigation

author

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

Similar Posts