சொன்னார்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சொதப்பப்பா


‘கட்சியின் பெயரை முடிவு செய்ய இரண்டு மூன்று மாத காலமாக ஆலோசித்தோம். எனது மனைவியும் நானும் கட்சியின் பெயர் குறித்து அடிக்கடி பேசுவோம். நேற்று இரவு தான் இந்தப் பெயரை முடிவு செய்தேன். மதுரை சிவன் மீனாட்சி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் அருளால் இந்த நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘

தனது கட்சிக்கு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம் ‘ என்று பெயர் சூட்டிய விஜயகாந்த்


‘மொழிக்கொள்கையில் தற்போதுள்ள நடைமுறையை வாழ்விற்கு ஏற்றாற்போல் அணுகவேண்டியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளையும், பிற அயல்நாட்டு மொழிகளையும் தமிழக மக்கள் விரும்பினால் அதனை படிப்பதற்கு எந்தவித தடையோ கட்டுப்பாடுகளோ இருக்கக்கூடாது. ஏனென்றால் தமிழக மக்களுக்கு தாய்மொழியான தமிழ் கண்போன்றது. பிறமொழிகள் தேவைப்படும்போது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியையும் கற்போம். ‘

விஜயகாந்த் தன் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டது.


‘நீங்கள் நல்ல மனிதர். உங்களுடன் வியாபாரம் செய்யலாம். ‘

‘You are a good man. We can do business with you. ‘

ஜார்ஜ் புஷ் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சொன்னது.


‘ஓண்டரியோவில் ஷரியா சட்டம் இருக்காது. மதத்தின் குறுக்கீடுள்ள சட்டம் இருக்காது. ஓண்டரியோவின் எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கும். ‘

‘ ‘There will be no sharia law in Ontario. There will be no religious arbitration in Ontario. There will be one law for all Ontarians. ‘ ‘

கனடாவின் பிரதமர் டால்டன் மக்கிண்டி


‘நான் விரும்பியிருந்தால் 25 வயதில் பிரதமர் ஆகியிருப்பேன். ‘

ராகுல் காந்தி


Series Navigation

author

சொதப்பப்பா

சொதப்பப்பா

Similar Posts