சொன்னார்கள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சொதப்பப்பா


ஜனசங்கம் ஹிந்து மகாசபாவுடன் கொண்ட கருத்து வேற்றுமைகளால் தோன்றியது. ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சியாக உருவாயிற்று. பாரதீய ஜனதா கட்சி காந்தியம்-சோஷலிசத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. ஹிந்துத்துவாவைக் கடாசி விட்டார்கள். சாவர்க்கருக்கு உரிமை கொண்டாட பா ஜ க விற்குப் பாத்தியதை இல்லை. பா ஜ க இன்னொரு காங்கிரஸ் தான்.

ஹிமானி சாவர்க்கர் (ரீடிஃபில் )


‘ரோஸ்கார் படாவோ ‘ (வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்)

மன்மோகன் சிங்கின் கோஷம். பழைய ‘காரீபி ஹடாவோ ‘ வை அடியொற்றியது.


காங்கிரஸ் கூட்டணியின் குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் உள்ள திட்டம் : தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமை. இது அட்டவணை சாதிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும். இது மிக முக்கியமான திட்டம்.

மீரா குமார் – சமூக நீதி அமைச்சர்.


‘வேலை முன்னுரிமைகள் கட்டாயமாக்கப் பட்டால், இந்திய பொருளாதாரம் அழிவுப் பாதையில் செல்லும். ‘

ஆதி கோத்ரெஜ் , கோத்ரெஜ் குழுமம் தலைவர்.


‘ தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமைக்கு எந்த சட்டமும் கொண்டுவரமாட்டோம். ஆனால் தொழில் துறை தாமே பொறுப்பேற்றுக் கொண்டு இந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க முன்வரவேண்டும். ‘

மன்மோகன் சிங்


காஷ்மீரி பண்டிட்கள் துரத்தப்பட்டு வாழும் நிலை கண்டு வருந்துகிறோம். பெரும்பான்மை (முஸ்லிம்) மக்கள் காஷ்மீரி பண்டிட்கள் திரும்பிவர வழிகள் வகுக்க வேண்டும். நல்ல வேளையாக இந்தியா ஜனநாயக நாடாய் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலோ சர்வாதிகாரத்தின் கீழ் நாங்கள் வாழ்கிறோம்.

இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தான் பத்திரிகையாளர்- காஷ்மீரை சுற்றிப் பார்த்தபின்பு.


இடதுசாரிகளை மிக வலிமையாக மேற்கு வங்காளத்தில் நாங்கள் எதிர்ப்போம்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சல்மான் குர்ஷித்


மிகக் கவலை அளிக்கிறது. இது பற்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வகுப்புக் கலவரங்கள் மூளும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், மத்திய அமைச்சர் ஈ . அகமது. கேரளாவில் பாதிரியார்களும், கன்னிகாஸ்திரீகளும் தாக்கப் பட்டது பற்றி.


– – – இந்த நிலையில் 2006-ல் கோட்டைக் கதவைத் திறக்கக் (காங்கிரஸ் கட்சிக்கு) குறைந்தது ஒரு டஜன் சாவிகளின் துணையாவது தேவைப்படும்.

சோம. நடராஜன், கரூர்.

தினமணி வாசகர் கடிதம் (அக்டோபர் 7, 2004) பகுதியில்


Series Navigation

author

சொதப்பப்பா

சொதப்பப்பா

Similar Posts