சொன்னார்கள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சொதப்பப்பா


Father roots for Tamil, son differs

அப்பா சொல்கிறார் தமிழ் வாழ்க, மகன் சொல்கிறார் ஆங்கிலம் வாழ்க

செப் 27,2004

ஊருக்குத் தான் உபதேசம் , உனக்கும் எனக்கும் இல்லை என்பது அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். லயன்ஸ் கிளப்பின் உலக இருதய தினம் அன்று லயன்ஸ் கிளப் தலைவர் தமிழில் பேசினார். ஆனால், பிரதம விருந்தினர் அன்புமணி ராமதாஸ் கறுப்பு சூட் கோட்டில் வந்திருந்தார். ‘சூட்டு எல்லாம் போட்டுகிட்டு வந்திருக்கேன். இங்கிலீஷ்லேயா பேசறேன் ‘ என்று ஆங்கிலத்தில் பேசினார்.

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வரும் ராமதாஸ் , பொது வாழ்க்கை, திருமணம், நீதிமன்றம், கடைப் பலகை, பள்ளிக்கூடம் இவற்றில் தமிழை வலியுறுத்தி வருகிறார்.

(செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்)


‘சென்னையில் பணி புரிபவர்கள் தம்முடைய கம்பெனிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். ‘

அமிதாப் ஸ்ரீவாத்சவா, சான்ஸா கம்பெனியின் இயக்குநர். (பெங்களூரிலிருந்து ஏன் கம்பெனிகள் சென்னைக்கு நகர்கின்றன என்பதற்குச் சொல்லும் காரணம்.)சேகர் என்றில்லாமல் உங்களால் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான போலீஸார் நீங்கள் சொல்வது பொய் என்கிறார்களே.. ?

(உக்கிரமாக) ‘‘ஏன் சொல்லமாட்டாங்க ? ஏதாவது ஒரு வீட்டில் ஒருத்தரைப் பிடிக்க முடியல்லேன்னா, அந்தக் குடும்பத்தையே கொண்டுபோய் ஸ்டேஷனில் வச்சு மிரட்டுவாங்க. ஏதாவது வீட்டில் அடைச்சு வைப்பாங்க. அவங்க தேடற ஆள் வர்ற வரை சித்திரவதை செய்வாங்க. என் விஷயத்திலேயும் அப்படித்தானே நடந்துச்சு. ஆனால் இப்ப இன்ஸ்பெக்டர் இளங்கோவனைப் பிடிக்க முடியல்லேன்னு பாவ்லா காட்டுறாங்க. அவரைப் பிடிக்கணும்னா அவர் மனைவி பிள்ளைகளை ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சு விசாரிக்கட்டும். தன்னால வந்திடுவாரில்லையா.. ?

குமுதம் ரிப்போர்ட்டரில் ஜெயலட்சுமி

(இளங்கோவன் தற்போது சரண் அடைந்துள்ளார். திண்ணை குழு)


கோஷ்டி பூசல்: இளங்கோவன் பேட்டி

மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று (செப்டம்பர் 26) சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது,

கேள்வி: கோஷ்டி மோதல் மீண்டும் தலைதூக்கி உள்ளதே ?

பதில்: எங்கள் கட்சியில் எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, கூட்டம் நடத்தியது இவை எல்லாமே எங்களுடைய உள்கட்சி பிரச்னை. இதுகுறித்து நான் கட்சியின் மேலிடத்தில் சொல்லியிருக்கிறேன். விரைவில் இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டுமென்றால் மாநில தலைமையை மாற்ற வேண்டுமென்று கருதுகிறீர்களா ?

பதில்: என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் மேலிடத்தில்தான் தெரிவிக்க முடியும். இதுகுறித்து கட்சி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நடவடிக்கை இல்லை என்பது எங்களுடைய கருத்து. அதைத்தான் நாங்கள் மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.

தி.மு.க., அ.தி.மு.க., உள்பட எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் அதிகம் என்பதால் கோஷ்டி பூசல் பெரியதாக தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சி உங்கள் ஆதரவாளர்களாக உள்ள மாவட்ட தலைவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதே ?

பதில்: நான் மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்களிடம் விசாரித்ததில் இதுவரை விளக்கம் கேட்டு எந்த கடிதமும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கேள்வி: ஜி.கே.வாசன் அமைச்சர் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே ?

பதில்: ஜி.கே.வாசன் மேலும் மேலும் வளரவேண்டும். அவர் மத்திய அமைச்சராக வேண்டும். அந்தமான் கவர்னராக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(விகடன்)


‘கொல்கத்தா எலெக்றிக் சப்ளை கார்ப்பரேஷன் தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். ‘

‘மாற்று மின்சார ஏற்பாடுகளுக்காக மானில அரசிற்கு விண்ணப்பித்தபோது, எங்களுக்கு ஹாட்லைன் (நேரடி தொலைபெசி ) இருப்பதால் தங்குதடையற்ற மின்சார அமைப்பு தேவையில்லை என்று அரசாங்கம் தெரிவித்துவிட்டது. ‘

மின்வெட்டால் ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பற்றி மிருணாள் சட்டர்ஜி , மருத்துவ மேலாளர்.


வைரமுத்துவின் கவிதைகளைக் கேட்கும்போது , பாரதியார் என் நினைவுக்கு வருகிறார்

– சாகித்ய அகாதெமி தலைவர் கோபிசந்த் நாரங்


தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்று பரப்பப்படும் தவறான பிரசாரம் பொய் என்பதற்கு இன்னொரு உதாரணம் தான் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல் வெளியீடு. கருணாநிதி ஏற்கனவே , தனது புத்தகங்களை சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் வெளியிட்டிருக்கிறார். அவரது சீடரான வைரமுத்துவும் இப்போது அதே பாதையில் செல்கிறார்.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.


தினமணியில்


Series Navigation

author

சொதப்பப்பா

சொதப்பப்பா

Similar Posts