சொன்னார்கள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சொதப்பப்பா


‘முஸ்லீம்களில் உடல்ரீதியாக ஏதும் பிரசினை இருந்தால் மஃடியை அணுகலாம். ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு இஸ்லாமில் இடம் இல்லை. ‘

அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட போர்ட் தலைவர் மெளலானா ரபி ஹஸ்னி நாத்வி


‘ஷியா மற்றும் சூனி மதத்தலைவர்களுக்கு நான் எழுதியுள்ளது இது : நாம் அனைவரும் அமர்வுகள் செய்து ஈரான் போன்ற மற்ற நாடுகளை முன்மாதிரியாய்க் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றி விவாதிக்க வேண்டும் . ‘

அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட போர்ட் துணைத்தலைவர் மெளலானா கல்பே சாதிக்


‘மக்கள் தொகையில் பெண்களின் விகிதாசாரக் குறைவு பற்றிப் பேசாமல் இரண்டு குழந்தைகள் போதும் எனப் பேச முடியாது. நாங்கள் கட்டாயப் படுத்துவதற்கு எதிராக நிற்கிறோம். கருத்தடைச் சாதனங்கள் பெருமளவு பற்றாக்குறை உள்ளது. குழந்தைகள் மரணம் அதிகமாய் உள்ளது. பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை இல்லை. ‘

பிருந்தா காரத் .அகில இந்திய ஜனநாயக பெண்கள் சம்மேளனம் சார்ந்தவர். முஸ்லீம்களிடையே குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசிய போது. (இந்த அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்தது)


‘இடதுசாரி அடிப்படைவாதம் என்று எதுவும் இந்த நாட்டில் இல்லை. ‘

மார்க்ஸிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்


‘தமிழ் நாட்டில் தலித்தைத் தொடுவதே தீட்டு என்று இன்னமும் உள்ளது. சூத்திரர்கள் வலிமை பெற்றால் பிராமணர்களைக் காட்டிலும் வன்முறை பாவிப்பார்கள் என்பதற்கு தமிழ் நாடு நிரூபணம். ‘

சந்திரபான் பிரசாத்


‘மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரான உமா பாரதியும்., கல்யாண் சிங்கும் பெரியாரிய பாரம்பரியத்தின் பலன்கள். அவர்கள் அதை உணராவிடும் அதுவே உண்மை. ‘

கி வீரமணி (திராவிடர் கழகம் தலைவர்)


மார்க்ஸிஸ்ட் கட்சி மெத்தச் செய்யும் உபதேசம் தன்னுடைய வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை நம்புவதில்லை. கைரலி தொலைக்காட்சி நிலையம் சமீபத்தில் தன் அமைப்பில் இருந்த 25 தொழிலாளர்கள் சரியாக உற்பத்தித்திறன் காண்பிக்காத காரணத்தால் வேலை நீக்கம் செய்தது. தயாரிப்புச் செலவும் இதனால் குறைந்தது. இந்த வேலை நீக்கம் இரண்டாவது முறையாய்ச் செய்யப்பட்ட ஒன்று. முதன் முறை இந்த வேலை நீக்கங்களுக்கு பணியாளர்கள் அளித்த மறுப்புகள் எழ முடியாமல் செய்தனர். தொழில்சட்டங்களின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் சொந்தத் தொலைக்காட்சி கம்பெனியில் நடந்தது இது. கைரலி தொலைக்காட்சி இந்த வேலை நீக்கத்தின் பின் செலவு 35 % சேமிப்பைப் பெற்றது. வருமான 57% அதிகரித்தது.

எகனாமிக்ஸ் டைம்ஸ் அறிக்கை


‘ஆந்திராவில் உலக வங்கியின் அமைப்பு ரீதியான மாறுதல்களினால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இப்போது உலக வங்கியின் பிரதிநிதிகளை ஏன் திட்டக் கமிஷனில் வைத்திருக்கிறீர்கள் என்பதை காங்கிரஸ் விளக்கியாக வேண்டும். ‘

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இடதுமுன்னணியின் கேள்வி


—-

‘Any member of the community has some physical problems, he can

approach the mufti. But there is no place for family planning in Islam ‘

All India Muslim Personal Law Board (AIMPLB) chairman Maulana Rabey

Hasni Nadwi.

‘I have written to Shia and Sunni religious leaders that we must sit

together and discuss a model of family planning based on the example of

these countries(like Iran) ‘ ‘ All India Muslim Personal Law Board

(AIMPLB) vice-chairman Maulana Syed Kalbe Sadiq

“You can’t have the two-child norm without addressing the issue of low

sex ratios. We are against coercion. There’s a huge unmet need for

contraceptives. Children don’t survive and women have to be given the right

to education,”

– Brinda Karat of the All India Democratic Women’s Association, when

speaking on the need for muslims to control the population. Midday,

Mumbai

‘There is nothing called Left fundamentalism in this country. ‘

– CPI(M) politburo member – Prakash Karat in Outlook

In parts of TN, even touching a Dalit is considered polluting. TN

proves that the Shudras, when empowered, can be more socially violent than

the Brahmins. While 42 per cent Dalits are independent cultivators in

UP, in TN it is only 12.8 per cent. ‘

– Chandra Bhan Prasad in Outlook

OBC leaders like Uma Bharati and Kalyan Singh are products of the

Periyarite legacy even if they do not realise that. ‘

– K Veeramani in Outlook

‘But then as in the case of charity, the CPM does not believe in

starting fair play from home. The success story of Kairali TV, saw its

management recently retrenching around 25 of its top and thus highly-paid

staff due to their lack of desired productivity and also as a means of

bringing down the cost of production.

This was the second round of retrenchment-spree (the first round had

witnessed some soon-to-be silenced protest by the affected employees) by

the channel sponsored by the CPM which opposes labour reforms. But when

Kairali channel has resorted to ‘firing’, it resulted in a 35% cut in

expenditure and a 57% increase in the revenue. ‘

– Economic Times report

‘Explain why you want World Bank representation in Planning Commission

when the Congress in Andhra Pradesh has held the World Bank ‘s

structural adjustment policies responsible for the plight of farmers and

ordinary people in the state, ‘

– Left front to the Congress UPA government. Times of India

Series Navigation

author

சொதப்பப்பா

சொதப்பப்பா

Similar Posts