திண்ணை அட்டவணை – செப்டம்பர் 21 , 2002

author
0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue


உடலுக்குத் துன்பம் தரும்படியான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் உலகக் குழந்தைகளின் விகிதாசாரம் – 9-ல் 1

அமெரிக்காவில் ஜார்ஜியா மானிலத்தில் டெய்லர் நகரில் ஒருவழியாக வெள்ளையர் பள்ளியில் கறுப்பர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டு – 2002

ஃபார்ச்யூன் 500 – அதாவது மிகுந்த சொத்துகள் உள்ள கம்பெனிகளில் முதல் ஐநூறு கம்பெனிகள் 2001-ல் அடைந்த லாபம் முந்திய ஆண்டை விட குறைந்த விகிதாசாரம் – -54 சதவீதம்

இந்த முதன்மையான ஐநூறு கம்பெனிகளில் மருந்துக் கம்பெனிகள் மட்டும் அடைந்த லாபம் அதிகரித்த விகிதாசாரம் : +35 சதவீதம்

ஜிம்பாப்வேயில் அரசியல் விவாதம் அனுமதியின்றி செய்தால் அடையக் கூடிய சிறைவாச மாதங்கள் : 6

அரசியல் விவாதம் பண்ண வேண்டுமானால் எத்தனை மாதங்களுக்கு முன்பு அனுமதி கோர வேண்டும் : 4

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைச் சாசனத்திற்கு அங்கீகாரம் வழங்காத நாடுகள் ; 2

அந்த் இரண்டு நாடுகள் : அமெரிக்கா, சோமாலியா

1988 -ல் இருந்த அவசர மருத்துவ வசதி அறைகள் அமெரிக்க மருத்துவமனைகளில் இதுவரை எவ்வளவு குறைந்துள்ளன : -1235

1973-ல் எஃப் பி ஐ அமெரிக்க உள்நாட்டு உஅளவு நிறுவனம் பட்டியலிட்டு வைத்த மனித உரிமைப் போராளிகளின் எண்ணிக்கை : மூன்று லட்சம்

அமெரிக்காவில் , திவாலாகிப் போனவர்களில், மருத்துவச் செலவைத் தாங்க முடியாமல் திவாலாகிப் போன ஆட்கள் விகிதம் : 2-ல் ஒன்று

அமெரிக்காவின் படைவீரர்கள் இன்று இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை : 148

1955-ல் அமெரிக்கப் படைவீரர் இருந்த நாடுகளின் எண்ணிக்கை : 95

Series Navigation

Similar Posts