திண்ணை அட்டவணை

author
0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue


1990-லிருந்து அமெரிக்கா பிரயோகித்த ஏழு வீட்டோக்களில் இஸ்ரேலை விமர்சிப்பதைத் தடுத்தது : 6 முறைகள்

பாலஸ்தீன நாடு உருவாகும் உரிமையை இஸ்ரேல் அங்கீரித்துள்ள ஆவணங்கள் : 0

பெண்டகன் அமெரிக்க உளவு நிறுவனம் அணுகுண்டுகள் இருக்கிறது என்று சொல்லிய நாடுகளில் உண்மையாகவே அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் : 7-ல் 5

சிரியா ஜோர்டன் எகிப்து ஈராக் நான்கு நாடுகளும் சேர்ந்து செலவு செய்யும் ராணுவச்செலவிற்கு இஸ்ரேல் ராணுவச் செலவிற்கும் 1967-ல் இருந்து விகிதாசாரம் : 57 சதவீதம். (அதாவது நான்கு நாடுகளின் மொத்தச்செலவில் பாதிதான் இஸ்ரேலின் செலவு)

இன்றைய விகிதாசாரம் : 187 சதவீதம்

புஷ் அமைச்சரவையின் லத்தீன் அமெரிக்க ஆலோசகர் ஆட்டோ ரீச் மொபைல் பெட்ரோல் கம்பெனியில் வேலைக்கிருந்த வருடங்கள் : 6

வெனிசுவேலாவில் இவர் தூதுவராய் இருந்த வருடங்கள் : 4

ஏப்ரலில் வெனிசுவேலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி ஒன்றும் தெரியாது , ஏனென்றால் செய்தி இருட்டடிப்பு ஆயிற்று என்று அவர் குறிப்பிட்டது : ஆட்சிக் கவிழ்ப்புக்கு 4 நாட்கள் கழித்து

அமெரிக்க ஜனாதிபதி புஷ் அமெரிக்கத் தேர்தலில் பெற்ற வாக்குகள் சதவீதம் : 45 சதவீதம்.

வெனிசுவேலாவின் முதல்வர் ஹ்யூகோ சாவெஸ் பெற்ற வாக்குகள் சதவீதம் : 60 சதவீதம்

மீன்பிடிப்பு மிதமிஞ்சிப் போய்விட்டது என்று அமெரிக்கா வாங்கிக் கவிழ்த்த மீன்பிடிப்படகுகளின் எண்ணிக்கை – 1985ம் ஆண்டிலிருந்து : 88

பிரிட்டனின் இரண்டு ஆறுகளில், பெண்களின் சுகாதாரப் படைப்புகள் ஆறுகளில் விடப்பட்டதால் ஆண்மை இழந்து பெண்மை அடைந்து விட்ட மீன்கள் : 100 சதவீதம்

அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனங்களில் செப்டம்பர் 2000த்திலிருந்து மார்ச் 2002வரை இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல் என்ற வார்த்தை வந்த எண்ணிக்கை = 118

இவற்றில் பாலஸ்தீன பதிலடித் தாக்குதல் என்று வந்த எண்ணிக்கை = 14

மத குழுக்களின் எண்ணிக்கை வரிசையில், 1990இல் தன்னை எந்த மதத்தையும் சாராதவர் என சென்ஸஸில் குறிப்பிட்ட மக்களின் ராங்க் =5

இன்று அந்த ராங்க் = 3

***

ஹார்பர்ஸ் பத்திரிக்கையிலிருந்து

***

Series Navigation

Similar Posts