இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

கோமதி நடராஜன்.


(1991ம் ஆண்டு டிசம்பாில் எழுதப்பட்டக் கடிதம்)

அன்புள்ள அனைவருக்கும்,

எங்கள் மூன்றாண்டு லண்டன் வாழ்க்கை 1990செப்டம்பர் 6ம்தேதிஏராளமான எதிர்பார்ப்புகளோடும்,எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடும் தொடங்கியது.லண்டன் வாழ்க்கையைப் பற்றி,அங்கு போய் வந்தவர்களிடம் விவரம் கேட்டும்,புத்தகங்களில் ஆழமாகப் படித்தும் ‘ப்பூ இவ்வளவுதானா ?சமாளித்து விடலாம் ‘என்ற இறுமாப்புடன்வந்து இறங்கினேன்.அப்படி வந்த என்னைத் திருத்தப் பாடங்கள் பல காத்திருந்தன.

தபாலில் நீச்சல் கற்று,நம்பிக்கையுடன் குதித்த அப்பாவி போல்,லண்டனில் பல மாதங்கள் திணர வேண்டியிருந்தது. சமையலரைச்சாதனங்கள்,உணவு வகைகள் அத்தனையும் இங்கே தாராளமாகக் கிடைக்கும் என்று சிலர் சொல்லியதைக் கேட்டு,ஒரே ஒரு புத்தம் புது சுமிட் மிக்ஸியை மட்டும் சுமந்து கொண்டு,அகதிகள் மாதிாிவந்து இறங்கினோம். பதினாறு வருடங்கள் கழித்து, அப்போதுதான் தனிக்குடித்தனம் தொடங்குவது போல்,குக்காிலிருந்து குழவி வரை பார்த்துப் பார்த்து வங்கினேன்.

2பவுண்டுக்குக் கரண்டி வாங்கினால் ‘ஐயோ!70 ரூபாய்க்கு ஸ்பூனா ?,100 ரூபாய்க்கு டம்ளரா ?140 ரூபாய்க்கு நெய்க் கிண்ணமா ? ‘என்ற கேள்விக் குறிகளும் ஆச்சியக்குறிகளும் தலைக்கு மேல் வட்டமடிக்கப் பதறிப் பதறி, உப்பு புளி எல்லாம் சேர்த்து, எண்ணி பத்தே பத்துப் பாத்திரம் வாங்கினேன். ஏன் பத்தே பத்துப் பாத்திரம் என்று கேட்கிறீர்களா ?இங்கே அஞ்சலைக்கும் கோவிந்தம்மாவுக்கும் நான் எங்கே போவேன் ? பத்துப் பாத்திரமானாலும்,நூறு பாத்திரமானாலும் நான்தானே தேய்க்க வேண்டும்தனக்கு வந்தால்தானே தொியும் தலைவலியும் காய்ச்சலும். நிறையபேருடையசிரமங்களைப் புாிந்திருந்தாலும்,இங்கே, அவைகளை, அனுபவித்து உணர நிறைய சந்தர்ப்பங்கள் வாய்த்தன. வீடு கிடைக்கும் வரை 26 நாட்களை ஒரு கெஸ்ட் ஹவ்ஸில், 15 வயது மகன்,10 வயது மகளுடன் ஒண்டுக்குடித்தனத்தில் முடங்கிக் கிடந்த வேளையில்,எங்கள் உணவு,காலையில் ரொட்டி ஜாம், மதியம் ரொட்டி ஸாஸ்,இரவு ரொட்டி சீஸ் என்று வகை வகையாய் நளபாகத்தில் ஓட்டினோம்.

இப்படி நாக்கு உலர ரொட்டிகளோடு போராடிக் கொண்டிருந்த வேளையில் டாவியில் ஒரு நிகழ்ச்சி.சென்னை சென்று திரும்பி வந்த, ஆங்கில மாது ஒருத்தி, எடுத்து வந்திருந்த வீடியோவை, ஒளிபரப்பினார்கள். அந்த சூழ்நிலையில் நாங்கள் மெய் மறந்து ரசித்த காட்சி,வாழை இலையில்,உப்பு ஊறுகாய்,பொாியல் அவியல்,கூட்டு,பச்சடி,கீழ் வாிசையில் பருப்பு ,சாதம் ,அதன் மேல் அபிஷேகம் செய்யப் பட்ட,சாம்பார்,உப்பு ஊறுகாய்களுக்கு மூடி போட்டார்போல் அப்பளம், என்று,பக்கவாத்தியங்களோடு சாதம் அருமையாய் சாதகம் பண்ணிக் கொண்டிருந்தது.போதாதற்கு,ஒவ்வொரு ஐட்டத்துக்கும் க்ளோசப் வேறு. எங்கள் வாயில் வேண்டா வெறுப்பாய்த் திணிக்கப்பட்ட ,மெல்லிய ரொட்டித் துண்டு,பாராங்கல்லாய்க் கனத்துத் தொண்டையில் அடைத்துக் கொண்டது. தட்டி இடுக்கு வழியே, காய்ந்த வயிற்றுடன் கல்யாணப் பந்தியை, எட்டிப் பார்க்கும், ஏழைச் சிறுவனின் ஏக்கத்தை அன்று உணர முடிந்தது.

நல்ல பகுதி,மூன்று படுக்கை அறை,பள்ளிக்கூடம்,ட்யூப்[பாதாள ரயில்]ஸ்டேஷன்,என்று சகலமும் பொருந்தி வரும் வரை 40 வீடுகளைப் பார்த்துக் கழித்தபின்,FINCHELI என்ற இடத்தில்[1990ல் மார்கெரெட்டைத் தேர்ந்தெடுத்து , ‘அப்பாடா ‘என்று அக்டோபர் 2ம் தேதி, எங்கள் வயிற்றில் பால் வார்த்த, அந்த வீட்டில், பால் காய்ச்சினோம்.ராகு காலம் எமகண்டம் நாள் கிழமை எதுவும் பார்க்கவில்லை,வீடு கிடைத்த நாளே நல்ல நாள்,என்று குடியேறினோம்.

அக்டோபர் 2,நல்ல நாள் இல்லை என்று எந்த ஒரு சுத்த இந்தியனும் சொல்ல மாட்டான்.

வீட்டில் இறங்கிய உடன், முதலில் செய்த காாியம்,இட்லிக்கு என்ன வழி என்று பார்த்ததுதான்.வீணா,சாவித்திாி,சாரதா,கோபனா, தங்கம் என்று மாநில வாாியாகத் தோழிகள் கிடைத்த உடன்,அவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி,

‘இட்லிக்கு எந்த அாிசி வாங்க வேண்டும் ? ‘என்பதுதான்.

[கடிதம் தொடரும்]

அன்புடன் கோமதி நடராஜன்

ngomathi@rediffmail.com

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts