நிகண்டு = எழுத்தின் அரசியல்

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தன்மீது வீசப்பட்ட கற்களை தடுத்தாட் கொள்ள முயன்றது எழுத்து. அது சிந்திய கண்ணீர்துளிகள் உலர்வதற்கு முன்பு அதன்மீது கத்தியை வீசினார்கள்.எழுத்து ரத்தத்தால் நனைந்தது.தன்மீது ஊர்ந்து சென்ர எறும்பொன்றை அதனால் பாதுகாக்க இயலவில்லை. நேற்றைய இரவுமுழுவதும் எழுத்து அழுதவாறிருந்தது.ஆயுதங்கள் எழுத்தின்மீது இறுதியுத்தத்தை நடத்த முற்பட்டபோது எழுத்து ஒரு வண்ணத்துப் பூச்சியாய் பறந்து சென்றது.ஆயுதத்தின் மீது எழுத்து இப்போது தன் தேன் கொம்புகளால் எதிர்தாக்குதலை நிகழ்த்த ஆரம்பித்தது.

நமது குமர்மாவட்ட பெருமன்றத்து படைப்பாளிகளின் எழுத்தின் தூரம் ஐம்பதாண்டு காலத்தையும் தாண்டியதாகும்.புதியவானம் சிற்றிதழில் அது தன் முதல் பேச்சை துவக்கியது.திணையின்வழி தனது இரண்டாம் பிறப்பை உறுதிப்படுத்தியது. பிறகதன் உருமாற்றம் தமிழகத்தின் படைப்புக் கண்கள் தன்பால் அகலவிரிக்க்ச் செய்யும் அளவிற்கு தலித் வெளியை வெளிப்படுத்தியது.சிறுபான்மை பண்பாட்டின் கதையுலகங்களை அகழ்ந்து த்ந்தது.இனவியலையும்,வரலாற்றெழுத்தியலையும் பண்பாட்டடையாளங்களையும் விரிவுபடுத்தியது.சென்ற ஆண்டில் வெளிவந்து தமிழ்ச்சூழலில் அதிர்வை நிகழ்த்திய உறை மெழுகின் மஞ்சாடிப்பொன் உட்பட்ட இருபதுக்கும் மேர்பட்ட நூல்கள தினை வெளியீடாய் வெளிவந்தன.
கடந்த காலங்களில் பெருமன்றத்தின் மேமாத நாவாஇலக்கியமுகாமில் வெளியிடப்பட்ட பின்னைகாலனியம்,அடித்தளமக்கள்பண்பாட்டியல் எழுத்து தொகுப்புகள் மிக முக்கியமான கவனிப்பிற்கும் ஆளாகின.
இந்த வரிசையில் இவ்வாண்டும் கலை இலக்கியப் பெருமன்றத்தில் தடம் பதித்த எழுத்தாளர்கள் முகாமிலும், ஆய்வரங்குகளிலும்,இணைய வெளியிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புநிகண்டு என்ற அடையாளத்துடனுங்கள் முன் தன்னை நிகழ்த்திக் கொள்ள வருகிரது. மார்க்யூஸும் சங்கததமிழின் காக்கைப்பாடினியும் இணையாக இத்தொகுப்பில் கைகோர்த்துவருகிறார்கள்.
ஹெச்.ஜி.ரசூல்
திணை வெளியீட்டகத்திற்காய்.

இந் நூலின் வெளியீடு மே17 காலை முட்டம் கலை இலக்கியமுகாமில் தொகுப்பாசியர்குழுவின் சார்பில் எம்.விஜயகுமார் தலைமையேற்க தேசிய விருதுகள் பெற்ற த்ரிஐப்பட எடிட்டர் லெனின் வெளியிட முனைவர் திருமதி செல்வகுமார் முதற்பிரதியை பெற்றுக் கொண்டார்.நூலின் தொகுப்பாசிரியர்கள் வி.சிவராமன்,நட.சிவகுமார் ஹெச்.ஜி.ரசூல் உள்ளிட்டோர்களும் உடனிருந்தனர்.

நிகண்டு
எழுத்தின் அரசியல்
பக்கங்கள் 80
விலை ரூ. 50
திணை வெளியீடு
15/15 அழ்கியநகர் ஆரல்வாய்மொழி.குமரிமாவட்டம்
perumantram@gmail.com

நூலின் உள்ளே
கதை சொல்ல வாழ்கிரேன்
காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் – தமிழில் ஆர். அபிலாஷ்.

அதிகாரத்தின் சரடுகளி இழுக்கத்துடித்த ஒரு
அராஜகவாதியின் கதை – எச். முஜீப்ரஹ்மான்.

நானு என் கதைகளும்
கீரனூர் ஜாகிர்ராஜா

மக்கிய பனைஓலைத்திறந்துசருமச் சுருக்கங்களோடு
வெளிவரும் மூதாய் – ஹெச்.ஜி.ரசூல்

பொய்யும் வழுவும் தொன்றும் முன்னும் பின்னும்
ஹாமீம் முஸ்தபா

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
கன்னியாகுமரி முக்குவர் சமூக வரலாறு
வறீதயா கான் ஸ்தந்தின்

அஞ்சுவன்னம் முஸ்லிம் வரலாற்று எழுத்தியல்
என்.ஷாகுல் ஹமீது

இனவரைவியஃல் நோக்கில் நாடார்சமூக
வாழ்க்கை வட்ட சடங்குகள்
முனைவர் சு செல்வகுமாரன்

புனைகதை எழுத்து
நட.சிவகுமார்

ஆசீவகம் என்றொருசமயம்
செந்தீநடராசன்

சவ்வூடு பரவல் கோட்பாடும்
பிம்ப பிரதிபிம்ப விளைவுகளும்
எஸ்.ஜே.சிவசங்கர்.

Series Navigation

author

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts