“படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

விஜயன்


செப்டம்பர் 15 2007 அண்ணா பிறந்த நாள், விநாயகர் சதூர்த்தி, கலைஞர் டிவி உதயமான நாள், காலை செய்தியில்..
பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு
முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு
தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு
விநாயகர் சதூர்த்தி வேலையில் மும்முரமாய் இருந்த மனைவியிடம் கேட்டேன், எனக்கொரு சந்தேகம், பிறந்து உயிருடன் இருக்கும் வரை பிறந்த நாள் கொண்டாடலாம் இறந்த பிறகு எப்படி பிறந்த நாள் கொண்டாடலாம்?
அவளும் மகான்கள் இறந்தாலும், வாழ்கிறார்கள் என்பது ஐதீகம் எனவே அவர்களுக்கு இறந்த பின்னரும் பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறில்லை என்று வாரியார் பாணியில் வியாக்கியானம் செய்தாள்!
நானும் விடாமல் அப்படின்னா இறந்த தேதியும் தானே கொண்டாடுகிறார்கள்? என்றேன். இறந்தவருக்கு பிறந்த நாள் இறந்த நாள் இரண்டும் கொண்டாடினால் எது முறையானது? என்றேன். அவள் அட ராமா உங்கள் வக்கீல் புத்தியை (குறுக்கு கேள்வி கேட்பது) விட்டு வேலையைப் பாருங்கள் என்று சொல்ல நானும் சரி சரி நீயும் அட “ராமா”வில் உள்ள ராமரை சில நாள் (பாஸ்) நிறுத்தி வை, டிவியிலிருந்து பேப்பர் வரை திகட்டுமளவுக்கு ராமர் சர்ச்சை அறிக்கை! மறு அறிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்றேன்.
என் “ஹப்பர்லிங்”கும் அலாகிரிதமும் சும்மா இருக்கவில்லை மீண்டும் ரிமோட்டில் கலைஞர் டிவிக்கு தாவியது. “போக்கிரி”யின் வெற்றி விழாவை பாலச்சந்தர் முதல் விவேக் வரை, “ஹயக்கிரியா”வின் புடவை மாடல் பெண் அஸினையும் (போக்கிரியின் நாயகி) சேர்த்து பாராட்டி அவரும் “கோல்கேட்” கிரிஸ்டல் புன்னகையுடன் பவ்வியமாய் பாராட்டை ஏற்றுக் கொண்டு, “ஸ்வீட் ராஸ்கல்” பாலச்சந்தர் பாஷையில் போக்கிரித்தனம் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதனால் வெற்றி பெறும் போன்ற இன்றைய சரக்குகளுக்கு, மனோதத்துவ நிபுணர்கள் யோசித்து பதில் சொல்லவும். மீண்டும் செய்திக்கு வருவோம் “சிறுபான்மையினருக்கு தனி ஒதுக்கீடு பற்றி. இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்ளும் முன் சில அடிப்படை வாசிப்புக்கு பக்குவம் அவசியம். இது பிராமனர் ஆதிக்க கருத்து அல்ல, சாதி சமய எதிர்ப்பும் அல்ல, ஓட்டு வாங்கி அரசியல் அபத்தத்தின் வெளிப்பாடு என்பதையும் புள்ளிவிபரப்படி மறைந்துவரும் சாதி, மத வேற்றுமையை இட ஒதுக்கீடு எப்படி மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துகிறது என்பதை புரிய வைக்க மட்டுமே.
நம் அரசியலமைப்புச் சட்டம் வரும் முன்னே (1950) தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை விகிதாச்சார ஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்பிலும் 1921 முதல் இருந்து வந்தது 1923ல் சுமார் 131 சாதியினரே பிற்படுத்தப்பட்டோரில் அறிவிக்கப் பட்டிருந்தது பரிணாம வளர்ச்சியில் நாளாக நாளாக அறிவிப்புகள் கூடி இன்று சலுகைப் பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் 141, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 42, சீர் மறபினர் 68 ஆக தனித்தனியாக மண்டல் கமிஷன் அறிக்கையில் 288 சாதியினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று அறிவிக்கப்பட்டது.
சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, இந்து மதத்திலிருந்து கிருஸ்துவ மதம் மாறியவர் கூட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலிலும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை, முஸ்லீம் மற்றும் கிறுஸ்துவர்களில் பெரும்பான்மையோர் மதம் மாறியவர்களே எனவே அப்படி மதம் மாறிய இந்துக்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கும் ஒதுக்கீடு சலுகை உண்டு. ஒதுக்கீடு சலுகை அறிவிக்கப் படாதவர்கள் தமிழகத்தில் வெகு சில சாதி சிறுபான்மையினரே! 12மூ சதம் என்கிறது புள்ளிவிபரம்;;.
இட ஒதுக்கீட்டின் அபத்தம் பற்றித் தெரிய வேண்டுமானால் தமிழக அரசின் அதிகாரப்ப+ர்வ வலை பக்கத்தை பாருங்கள் அதில் புள்ளி விபர அட்டவனையில் 1911 முதல் 2001 வரை தமிழக _னத் தொகையில் கல்வி கற்றோர் சதவீதம் எப்படி 7 சதவீதம் தொடங்கி 75சதவீதமாக உயர்ந்தது என்று ஆதாரப்ப+ர்வமாக சொல்கிறது. என் கேள்வியெல்லாம் சுமார் 80 வருடங்களாக ஒதுக்கீடு செய்து 75 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றதாக கல்வியில் முன்னேறியவர்கள் (லிட்டரேட்) என்று 2001ல் அறிவிக்கப்பட்டால், கல்வியறிவு பெற்றவர்களில் 87 சதவீதம் மக்களை கல்வியில் பின் தங்கியவர்கள் என்று எப்படி அறிவிக்க முடியும். இட ஒதுக்கீடு கல்வியறிவில் பின்தங்கியோருக்கு சலுகை என்றால் 75 சதவீதம் கல்வியறிவுடைய ஜனத்தொகையில் 69மூ இட ஒதுக்கீடு எதற்கு? இது அரசியல் சாஸன மோசடி இல்லையா? உண்மையிலேயே பின்தங்கியவனுக்கு சலுகை அளித்தால் அது நீதி, பட்டியல் போட்டால் மோசடி!
மேலே நான் சொன்ன விஷயம், பொதுவாக இட ஒதுக்கீடு கொள்கையில் உள்ள அபத்தம் இது எல்லாருக்கும் பொருந்தும் தமிழகத்தில் இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் மட்டுமே தரப்படுகிறது. 1950ல் அரசியலமைப்புச் சட்டம் வரும் முன்னால் வர்ணாஸ்ர சமூகம் இருந்து அதில் சாதி வேற்றுமை இருந்தது என்பதை யாரும் மறுக்கவில்லை. மெக்கலே கல்வி முறை வந்து குலத் தொழில் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இன்று வெகுசில கிராமங்கள் தவிர “குலத் தொழில்” அறவே தொலைந்து கல்வி அல்லது வியாபார வேலை நிமித்தமாய் மக்கள் வேறு சமூக வாழ்க்கைக்கு மாறிவிட்ட பிறகு, சாதி வழி ஒதுக்கீடு எதற்கு? நான்காவது தலைமுறையில் நாவிதனும் சித்தப்பனாகிய பிறகு! ஆரசியலமைப்பில் “சாதி, மதம், மொழி, பிறப்பு இதனடிப்படையில் பேதம் கூடாது என்று அடிப்படை உரிமைச்சட்டம் வந்த பிறகு” சாதி வழி ஒதுக்கீடு எதற்கு. சாதி சமய வேறுபாட்டை களைய வேண்டிய அரசு “சலுகை இட ஒதுக்கீடு மூலம் மீண்டும் மீண்டும் சாதி அமைப்பை காப்பாற்றுவது சரியா? ஓட்டு வாங்குவதற்கு வேண்டுமானால் ஹகுழுக்களாக’ (“சாதி, மதம்”) மக்களை வைத்திருந்தால் அது சௌகரியமானதாகப் படலாம். நடைமுறையில் சாதி மத அடிப்படை சலுகைகள் அரசியலமைப்புச் சட்டத்தற்கு புறம்பான நிலை? இருந்தாலும் வெட்கமின்றி தொடர்கிறது மக்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு முற்றிலும் இல்லை சலுகையை யார் விடுவார்?
சிறுபான்மை இட ஒதுக்கீடு அவசரச் சட்டத்தின் உண்மையான அறிவிப்புக்கும், அதில் உள்ள ஆங்கில சட்ட சொல்லுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது பின்தங்கிய கிறுஸ்துவர்கள் மற்றும் பின்தங்கிய மூஸ்லீம்கள் என்று அழைப்பது சிறுபான்மையினருக்கு உண்மையில் புதிதாக எந்த ஒதுக்கீடு ஏதும் இல்லை அவர்களில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் 30 சதவீத ஒதுக்கீட்டிலிருந்து ஹதனி ஒதுக்கீடாக 7மூ’ பெறுகிறார்கள். இதற்கான நோக்கம் சட்டத்தில் கூறியது போல சிறுபான்மையினர் தங்கள் மக்கள் தொகையில் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிற்படுத்தப்பட்டோர் கமிஷனும் அவ்வாரே பரிந்துறைக்க “முதல்வரும் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்” என்பதற் கிணங்க சிறுபான்மையினர்பால் கனிவும் கரிசனமும் கொண்டு தனி ஒதுக்கீடு அறிவித்துவிட்டார். எனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஏனைய பல சாதியினருமே அவரவர் மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு கேட்டால் தவறில்லை ஆனால் அது சாத்தியமில்லை! 30 சதவீகித இட ஒதுக்கீட்டில் 7 சதம் போக மீதம் 23மூல் 141 பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்த விகித அடிப்படையில் பிரித்துக் கொடுப்பது சாதிக்கு 0.6 சதமா? “சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்” என்பது மாறி சொல்லாததையும் செய்வோம், செய்ய முடியாததையும் செய்வோம்” என சொல்லும் அரசு அமைந்திருப்பது நம் ப+ர்வ ஜென்ம பலனே! ஒரு வேலை முதல்வரின் கனிவும், கரிசனமும் அனைவருக்கும் சம நீதி வழங்கலாம், சாதி மக்கள்த் தொகை வாரியாக! என்று தோன்றினால் அதையும் அறிவிக்கலாம். தேர்தலுக்கு மிகவும் உதவும்!
இது நடந்து ஒரு வாரம் கழித்து யதேச்சையாய் மற்றொரு ஹப்பர் லிங்க் “ஜனா” படத்தில் “தப்பு எங்கு நடந்தாலும் அந்த தப்பை தட்டிக்கேக்கறது என் தப்பில்லை” அஜித்தின் பஞ்ச் டைலாக்! சினிமாவில் மட்டுமே செய்ய முடியும்! வசனத்தை பேச ஒருவரும் எழுத ஒருவரும் இருப்பதால் எது வேண்டுமானாலும் சாத்தியமே!


kmvijayan@gmail.com

Series Navigation

author

விஜயன்

விஜயன்

Similar Posts