தெளிவு

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

தேவமைந்தன்


ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருட

னோ என்னஎன்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; புண்படுகிறோம்; சந்தோஷப் படுகிறே

ாம்; வருந்துகிறோம்; புண்படுத்துகிறோம்; சந்தோஷப்படுகிறோம்; வருந்துகிறோம்… இன்னும் செ

ால்லிக்கொண்டே போகலாம். பல சிக்கிக்கொள்ளுதல்கள்[commitments]. பற்பல உடன்படுதல்கள்

[involvements]. பல வாக்குறுதிகள்; கொடுத்தவற்றை நமக்கே நாம் வகுத்துக்கொள்ளும் பாணியில்

மீறி, ‘அப்பாடா ‘ என்று நிம்மதியடைதல்கள். பிறகு தூங்குகிறோம்; நிம்மதியாகவா ? இல்லை, பக

ல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தம் மிகுந்த கனவுகளோடு. ‘ ‘உங்கள் நண்பர்கள் யார்யார் என்று

காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்! ‘ ‘ என்பது பழையது. ‘ ‘உங்கள் கனவுகள் எை

வஎவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்! ‘ ‘ என்பது புதியது. நாம் வா

சிக்கும் புத்தகங்கள் என்று ‘இல்லாத ‘ பட்டியலைக் கொடுத்து, தப்பிவிடலாம். கனவுகள் விஷயத்தில்

இது நடக்காது. கண்களே காட்டிக்கொடுத்து விடும்.

சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். ‘தெளிவு என்றால் எ

ன்ன ? கொஞ்சம் சொல்லுங்கள்! ‘ என்றுதான். எத்தனைவகை ‘வியாக்கியானங்கள் ‘ வரும்; பாருங்க

ள். என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன், பல ஆண்டுகளுக்கு முன். அவர்

பெயர் வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா. ‘ இயற்கை மருத்துவர். எந்த நோய்க்கும், மோ

ட்டுவளை பார்த்து ஏதேதோ முணுமுணுத்துவிட்டு பேயன்பழம் ஒன்று தருவார். பலபேருக்கு கு

ணமாயிற்று. ‘கைவசம் புண்ணியம் போதாதவர்கள், ‘ மேற்காலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நி

லையத்துக்குப் போவார்கள். இன்னும் போதாதவர்கள், அங்கிருந்து ஜி ஹெச் ‘ச்சுக்கு; மேலதிகம் ே

பாதாதவர்கள், மேலே, மேலே-மேலே! – இது அவர் ‘பாஷை. ‘ ‘மொழி ‘என்று திருத்த முடியாது.

ஒருமுறை பண்டிதர் ஒருவர் அவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு… ‘ ‘பாடையிலே போறவனே! ‘ ‘

என்று திட்டு வாங்கினார். அவர் செய்த தப்பு, பாஷை என்று சொல்லக்கூடாது[ ‘ ‘பாடையென்றல்ல

வோ அறைதல் வேண்டும் ?] என்று அறிவுறுத்தியதுதான். இன்று என்றால் மொழி என்று சொல்லித்

தப்பித்து இருந்திருப்பார். சரிதான்.

‘பேயன்பழத் தாத்தா ‘ தனக்கென்று திட்டவட்டமான முடிவுகளையும் முடிபுகளையும் வைத்தி

ருந்தார். ‘ ‘தெளிவு ‘ன்னா இன்னா ‘ன்னுதா ‘ன கேட்ட ? ‘ ‘ என்று சொல்லிவிட்டு ஜாதிக்காய்ப் பெட்டி

ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணக்கும் பழைய புத்தகம். ‘திருமந்திரம். ‘ ‘ ‘பிரி, அந்த

139ஆம் பாட்டெ.., ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன் ‘ல..அந்தப் பக்கத்த எடு… ‘ ‘ அவர்

பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்காரம். ‘ இசையான மொழி.[ ‘இசை ‘ன்னு சொன்னாலே பயமா

இருக்கு.. ‘இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ‘ என்றே பலர் பேசுகிறார்கள். சிலர் வை

லயெழுதுகிறார்கள்]…. வாசித்துக் காட்டச் சொன்னார்; வாசித்த முறை திருத்தினார்.. ‘ ‘ஆங்..பாட்ட

ல் ‘லாம் இப்ப் ‘டிப் படிக்கக் கூடாதெ…திருத்தமா, ஒப்புராவா ஓசை நிரவி படி! ‘ ‘

‘ ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே ‘ ‘

படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.

ஒருமாதிரி மருமமாக சிரித்தார். ‘ ‘பொருள் சொல்ல் ‘றதா..சொன்னா விளங்காது.. நீயா படி..

ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் படி.. ஒவ்வொரு வயசி ‘லயுந்தான்.. புதுசு புதுசா விளங்கும்.. ஒவ்வொருத

ீவாளிக்கும் பொங்கலுக்கும் உனக்கு புதிசு புதிசாத் துணியெடுத்துத் தர்றாங் ‘கல்ல.. அதுமாதிரி ‘குரு ‘

ஒனக்கு ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் புதிசு புதிசா பொருள் விளங்க ‘றமாதிரி தருவார்.. ‘ ‘ என்றார்.

‘ ‘தாத்தா! குரு ‘ன்னா வாத்தியாரா ? ‘ ‘ – கேட்டேன்.

‘ ‘ம்ம்..அப் ‘டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குரு… ‘ ‘ என்று முனகலாகப் ே

பசினார். கண்களில் ஆழமாகப் பார்த்துவிட்டு சொன்னார்: ‘ ‘பசுவதீ! இதெல்லாம் ‘டக் ‘க்னு எடுத்து

முன்னால வைக்கற சமாச்சாரமில்லப்பா.. ஒன் வாழ்க்கையில..அட என்னாப்பா..ஒவ்வொருத்தவங்க

வாழ்க்கை ‘ல அடிபட்டு அடிபட்டு தெளிஞ்சுக்கறபோது அப்பப்ப வருவதுதாம் ‘ப்பா தெளிவு..

அட..ஒஞ்சாமி மட்டுமில்ல..ஒனக்கு அது தந்து இருக்கிற வாழ்க்கை ‘லே ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் நீ

வுழுந்து எழுந்து தெரிஞ்சுக்கிற பாரு..அதுதான் குரு.. அதென்னவோ..ஒரு உபநிசத்து ‘ங்கறாங்

க..அதுல சாமி, ஆசாமி ‘ல இருந்து வேசி வரி ‘ல..அது என்னமோப்பா இருவத்தாறு இருவத்தேழு

குரு எனக்கு ‘ன்னு சொலவம் வருதாம் ‘ல…. ‘ ‘

எனக்கென்னவோ ‘பேயன்பழத் தாத்தா ‘ எனக்கு அதன் நேர்பொருள் சொன்னதாகத் தெரி

யவில்லை. ஒருசமயம் அவர்க்கும் அது விளங்கவில்லையோ என்னவோ ?

ஆனால் ‘இரசமணி ‘ என்றும் ‘ ‘அது குருகுலக் காலம் ‘ என்றும் ‘ ‘கு ‘ என்றால் இருள்; ‘ரு ‘ எ

ன்றால் நீக்குதல் ‘ ‘ என்றும் சொல்லி மேலும் குழப்பாமல், தனக்குத் தெரிந்த பொருளை நேர்மையா

கச் சொன்னாரே….

அதுவே ஒரு தெளிவுதான்.

****

pasu2tamil@yahoo.com

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts