லதா ராமகிருஷ்ணன்
‘கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என் தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.
– சமீபத்தில் ‘மருதா ‘ பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள ‘மயில்வாகனன் ‘ மற்றும் கதைகள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும். தொனியும், ‘மாஜிக்கல் ரியலிஸம் ‘ என்று வகைப்படுத்தப்படும் பாணியில் அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல் போக்குகளை சுட்டுவதாகவும். ‘நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி ‘. ‘வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ‘. ‘டினோசர் – 94 ‘. ‘ஒரு வரலாற்றுக் கதை ‘. ‘பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் ‘. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன,
‘துரோகத்தின் நிழல் ‘. ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ‘ முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,
நிலவும் தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில ‘இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான அமைப்புகளில் ஒன்றான ‘வெளி ‘யின் சார்பில் சமீபத்தில் ‘அஜயன்பாலாவின் ‘ கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன். சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. ‘மருதா ‘ பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது,
‘வெளி ‘ இலக்கிய அமைப்பின் நிறுவனர் ‘வெளி ரங்கராஜன் ‘ நூலிலுள்ள கதைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும் ‘ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக் குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே ‘வெளி ‘யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. ‘மாய யதார்த்தம் ‘ வகையான கதைகளை எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு ‘ஆன்மா ‘ உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் ‘வெற்று வார்த்தை ஜாலமாகப் போய்விடும் அபாயமுண்டு ‘ என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன் தொடர்பாக அவர் கூறிய ‘குட்டி டினோசார் ‘ கதை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது, அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால் அஜயன்பாலாவின் ‘வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ‘ போன்ற கதைகளை கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும் அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட எழுத்தாளர் ‘பால்நிலவன் ‘ அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார், கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள் உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில் ‘திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ‘, இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம் முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்,
காஞ்சிபுரத்தில் பிறந்தவரான அஜயன்பாலா திரைப்பட இயக்குநராகும் குறிக்கோளுடன் சென்னைக்கு வந்தவர், உதவி இயக்குநராகப் கோ,ராஜேஷ்வர். பாலசேகரன் ஆகியோரிடம் பணிபுரிந்தவர், தற்சமயம் இயக்குநர் தங்கர் பச்சானிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார், இவருடைய ‘கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி ‘ என்ற சிறுகதை இந்தியா டுடே தமிழ் பதிப்பில் வெளியாகி. அந்த மாதத்தின் இலக்கிய சிந்தனை விருதைப் பெற்றது, தீராநதி. ஊலகத் தமிழ்,காம். காலச்சுவடு. நவீன விருட்சம். குலுக்கை. முதலிய பலவற்றிலும் இவருடைய சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன, “Lust for Life” இவருக்கு மிகவும் பிடித்த படைப்பு, இத்தாலிய திரைப்படமான “Bicycle thieves”ன் திரைக்கதையை இவர் தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார்,
தொடர்புக்கு ajayenbalah@yahoo.com
- சந்தன
- உடையும் மதிப்பெண்கள்
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- நனவு
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- ஸ்ட்ராபெர்ரி சாஸ்
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
- கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….
- வடக்கு வாசல்
- About low standard of TamilNadu state board science text books.
- பரிமளத்திற்கு இறுதிப் பதில்
- IYAL VIRUDHU PROGRAM
- அன்னையின் அணைப்பு
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- கணக்கு வாத்தியார்
- புகைவண்டி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- திருவண்டம் – 1
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- ஆண்-பெண் நட்பு
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- ஒன்று பட்டால்…
- Workshop/Seminar for Literary Translation. 4th June (Saturday), 2005, 5th June (Sunday)