எஸ். பாபு
ரோஜாப்பூக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வருவதுதான் பெண்ணுக்கு அழகு என்பார்கள் நண்பர்கள் சிலர். கூந்தலில் ஒற்றை ரோஜா செருகிக் கொண்டு வரும் பெண்களைத்தான் எனக்குப் பிடிக்கும் என்று சொல்வேன் நான். சலங்கை ஒலி படத்தில் ‘நாத விநோதங்கள்’ பாடலில் வரும் ஜெயப்ரதா தன் கூந்தலில் ஒற்றை ரோஜா வைத்திருப்பார். அப்பாடல் காட்சிகள் என் மனதை விட்டு அகலாமல் ஸ்டில்களாக இருந்தன வெகு நாட்கள் வரை. மல்லிகைப்பூ மணம் அது இருக்கும் இடத்தையும் சுற்று வட்டாரத்தையும் மணக்கச் செய்து மயக்கும். ஆனால் ரோஜா அப்படிப் பட்டதல்ல. மணம் அதிகம் கிடையாது. ஆனாலும் லேசாக வரும் ரோஜாவின் மணம் வெகு சுகந்தமானது. எனக்கு அதுவே பிடித்தமானது. ஒரு சம்பவத்திற்குப் பிறகு ரோஜாப்பூக்கள் எனக்கு பரம எதிரியாகிவிட்டன. ஏன் என்பது கீழ்காணும் கவிதையில். எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய விமர்சகரும் எனது நண்பருமான பாமரன், இந்தக் கவிதையை குறிப்பிட்டு பேசினார் “எனக்கு பொரி என்றால் மிகவும் பிடிக்கும். எனது தந்தை இறந்த போது இறுதி ஊர்வலத்தில் சுடுகாட்டுக்கு போகும் வழியெங்கும் இரு புறமும் பொரியை வாறி இறைத்துக்கொண்டே வந்தார்கள். அதைப் பார்த்ததிலிருந்து பொரி என்பது என்க்கு பிடிக்காத பண்டமாகிவிட்டது. எனக்கு ஏற்பட்ட அனுபவம் போன்ற ஒன்றை பாபுவின் இக்கவிதையில் கண்டேன், அதனாலேயே இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கவிதை” என்றார். இனி கவிதை:
—-
ரசனை
—-
சற்றுமுன் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளோடு
நடைபாதைப் பூக்கடையில்
தொடுக்கப்படுகின்ற
வாசனையுடன் கடந்து செல்லும் கூந்தலில்
ஒய்யாரமாக வீற்றிருக்கின்ற
வாசலில் நட்டு வைத்த பதியனில்
செவ்விதழ் விரித்துச் சிரிக்கின்ற
அம்மன் கோவிலில் எப்போதாவது
அர்ச்சகர் கொடுக்கின்ற
ரோஜாப்பூக்களைப்
பிடித்திருந்தது
அப்பாவின்
உயிரற்ற உடல்மீது
உதிர்ந்து கிடந்தவற்றைப்
பார்க்கும் வரை.
—-எஸ். பாபு
agribabu@rediffmail.com
Babu Subramanian
Postdoc
Department of Agriculture, Food and Nutritional Science,
410, Agriculture / Forestry Centre,
University of Alberta,
Edmonton T6G 2P5
Alberta, CANADA.
Office phone: 780-492-1778
Home phone: 780-432-6530
- விமானப் பயணங்கள்.
- தாய்க்கு ஒரு நாள்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- கவிதை உருவான கதை – 5
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்
- கடிதங்கள் – மே 6,2004
- மே நாள்
- முணுமுணுப்பு
- கவிதை
- வீழ்த்துவதேன் ?
- பகை
- கதவாக நான்..
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- பின் நாற்றம்
- பாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு
- கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்
- எழிற்கொள்ளை
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- குற்றவாளிகள் யார் ?
- இயற்கையே நீயுமா…. ?
- கதவு திறந்தது
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- பிறந்த மண்ணுக்கு..- 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- பனிநிலா
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- விதைத்தது
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- சத்தியின் கவிக்கட்டு 5
- அட்சய பாத்திரங்கள்…!!!
- புள்ளிக்கோலம்.
- கண்ணாடியும் விலங்கும்
- நிலவோடு நீ வருவாய்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- இடக்கரடக்கல்