பாரதிராமன்
துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம்
மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம்
கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம்
விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம்
வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம்
புயல் வீசுமென்று பாய்மரங்களை இறக்கிக் கொண்டோம்
அக்னி நட்சத்திரத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டோம்
பனி வீழ்கிறதென்று பட்டும் கம்பளியும் போர்த்துக் கொண்டோம்
போர்க் குழிகளில் பதுங்கி கிடைத்ததைப் பகிர்ந்துண்டோம்
இருளில் வாழக்கற்று இல்லாமைகளை ஏற்றோம்
இயலாமைகளைச் சகித்து இறைவன் செயல் என்றோம்
இன்னும் இரங்கி எதிாி அணி அகதிகளையும் ஆதாித்தோம்
எத்தனைதான் முடிகிறது
இந்த ஏற்றமிகு மனதால்-
அனுபவித்து ஆளவும்
அனுசாித்துப் பேணவும்
அவதிகளை ஏற்கவும்
அன்பைப் பொழியவும் கூட!
கவிதையை இங்கே முடித்துவிடலாம்தான்…இதை இப்படியே கவிதை வட்டத்தில் வாசித்தால் என்ன கருத்துகள் கூறப்படக்கூடும் ? மனதின் செயல்பாடுகளை விவாித்து இருக்கிறீர்கள். போர்க்கால பதுங்கு குழிகளைப் பற்றியும், போர்க்கால வாழ்க்கை முறைகள் பற்றியும் விவாித்திருக்கிறீர்களே…. நீங்கள் அதை அனுபவித்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த நிகழ்ச்சிகளை உங்களால் வர்ணிக்க முடிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த மாதிாி விவரங்களை அடுக்கிக்கூறும் கவிதைகள் நிறையவே வந்திருக்கின்றன. சிறப்பித்துக் கூற இக்கவிதையில் வேறு ஏதாவது ஈர்ப்பு வேண்டுமே என்று சிலர் கருதக்கூடும்.
இரண்டாம் உலகப்போாின்போது ஏ.ஆர்.பி. பதுங்கு கட்டிடங்களில் விமானத்தாக்குதல் ஒத்திகைகள் நடந்தபோது ஒளிந்துகொண்ட சின்ன வயது அனுபவம் மேகத்திரை போல் என் நினைவில் வந்தாலும் அதையும் அது தொடர்பானவற்றையும் கூறுவது ஒன்றே கவிதையின் சிறப்பாக முடியாது என்று உணர முடிகிறது. சுய ரசனைக்கே சற்றுக் குறைவாகப்படுகிறது. எனவே சிறிது சிந்தித்து சில வாிகளைப் பின்வருமாறு சேர்க்கிறேன்
எத்தனைதான் முடிகிறது
இந்த ஏற்றமிகு மனதால்..
அனுபவித்து ஆளவும்
அனுசாித்துப் பேணவும்
அவதிகளை ஏற்கவும்
அன்பைப் பொழியவும்கூட!
பிறந்தது பெண்
என்றபோதில் மட்டும்
பேதலித்துப் போவதேன்
பேய் மனம் ?
இப்போது கவிதையில் ஒரு திருப்பம் வந்திருக்கிறதல்லவா ? என்றாலும் என் ரசனையில் ஏதோ இடிக்கிறது… தொிந்தோ தொியாமலோ மனதை பேய் என்று அழைத்தாகிவிட்டது. ஆகவே அந்த மனம் சில வேளைகளில் பேதலித்துப் போவதை நான் ஏன் ஆச்சாியமாகப் பார்க்கவேண்டும் ? பேயின் இயல்புதானே பேதலிப்பது ?
இந்த திருப்பம்கூட இப்போது போதுமனதாகப் படவில்லை. இன்னும் சிந்தித்து மேலும் இரண்டு சொற்கள் சேர்க்கிறேன். இன்னொரு திருப்பம். நிஜமான ஆச்சாியம். முழுக்கவிதை இதோ!
துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம்
மலர்ந்த்ன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம்
கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம்
விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம்
வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம்
புயல் வீசுமென்று பாய்மரங்களை இறக்கிக் கொண்டோம்
அக்னி நட்சத்திரத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டோம்
பனி வீழ்கிறதென்று பட்டும் கம்பளியும் போர்த்துக் கொண்டோம்
போர்க் குழிகளில் பதுங்கி கிடைத்ததைப் பகிர்ந்துண்டோம்
இருளில் வாழக்கற்று இல்லாமைகளை ஏற்றோம்
இயலாமைகளைச் சகித்து இறைவன் செயல் என்றோம்
இன்னும் இரங்கி எதிாி அணி அகதிகளையும் ஆதாித்தோம்
எத்தனைதான் முடிகிறது
இந்த ஏற்றமிகு மனதால்..
அனுபவித்து ஆளவும்
அனுசாித்துப் பேணவும்
அவதிகளை ஏற்கவும் அன்பைப் பொழியவும்கூட!
பிறந்தது பெண்
என்ற போதில் மட்டும்
பேதலித்துப் போவதேன்
பேய் மனம் ?
பெண் மனமும்!
என் ரசனைக்கு இப்போது ஒரு திருப்தி. உங்களுக்கு எப்படியோ ?
—கணையாழி, அக்டோபர்-1994.
bharathiraman@vsnl.com
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- பணமே உன் விலை என்ன ?
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்