சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் कुतः (kutaḥ)எங்கிருந்து ?( From where? ) என்ற வினாச்சொல்லைப்பற்றித் தெரிந்து கொள்வோம். ஐந்தாம் வேற்றுமையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம் . இதுவரை कः/का/किम ?(kaḥ/ kā /kim ? ) , कति ?( kati ? ) , कदा ? ( kadā ? ) ஆகிய வினாச்சொற்களைப்பற்றி விரிவாகப் படித்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தந்தை , மகன் உரையாடலை உரத்துப்படிக்கவும்.
पुत्रः – एतत लोकयानं कुतः आगतम् ? (etat lokayānaṁ kutaḥ āgatam ?

மகன் – இந்தப் பேருந்து எங்கிருந்து வந்தது?
पिता – मैसूरुतः आगतम् ! (maisūrutaḥ āgatam !)

தந்தை – மைசூரிலிருந்து வந்தது .
पुत्रः – इतः कुत्र गच्छति? (itaḥ kutra gacchati ?)

மகன் – இங்கிருந்து எங்கே செல்கிறது ?

पिता – इतः मैसूरु गच्छति ! (itaḥ maisūru gacchati !)

தந்தை – இங்கிருந்து மைசூர் செல்கிறது .

पुत्रः – ततः कदा आगमिष्यति ? (tataḥ kadā āgamiṣyati ?)

மகன் – அங்கிருந்து எப்போது வரப்போகிறது?
पिता – ततः श्वः आगमिष्यति ! (tataḥ śvaḥ āgamiṣyati |)

தந்தை – அங்கிருந்து நாளை வரப்போகிறது.

पुत्रः – एते जनाः किं कुर्वन्ति ? (ete janāḥ kiṁ kurvanti? )

மகன் – இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் ?

पिता – एते इतस्ततः सञ्चरन्ति ! (ete itastataḥ sañcaranti |)

தந்தை – இவர்கள் இங்குமங்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலில் मैसूरुतः (maisūrutaḥ) என்பதற்கு பதிலாக मैसूरुनगरात् (maisūrunagarāt)என்றும் சொல்லலாம். அர்த்தம் மாறாது. ஐந்தாம் வேற்றுமை ( पञ्चमीविभक्तिः pañcamīvibhaktiḥ)Ablative case ல்

शब्दस्य मूलरूपम् + तः = पञ्चमीविभक्तिः ( śabdasya mūlarūpam + taḥ = pañcamīvibhaktiḥ )

उदा – पाठशाला – पाठशाला + तः = पाठशालातः (pāṭhaśālātaḥ) பள்ளியிலிருந்து

சரி தவறு
इतः

(itaḥ)

अत्रतः

ततः (tataḥ )

तत्रतः

कुतः

( kutaḥ)

कुत्रतः
उपरिष्टात्

( upariṣṭāt)

उपरितः

ஐந்தாம் வேற்றுமை ( पञ्चमीविभक्तिः pañcamīvibhaktiḥ) Ablative case – விதிமுறைகள் (Rules)
1. ” பயம்” என்ற வார்த்தை உபயோகிக்கும்போதும், பயத்திற்கான காரணப் பொருள் எப்போதும் ஐந்தாம் வேற்றுமை (Ablative case) யில் அமையும். (The words denoting the cause of fear used with verbs expressing ‘fear’ are in the Ablative case)

उदा – व्याघ्रात् हरिणः भीतः भवति ! (vyāghrāt hariṇaḥ bhītaḥ bhavati |) or

व्याघ्रतः हरिणः भीतः भवति ! (vyāghrataḥ hariṇaḥ bhītaḥ bhavati|)

உதா – புலியிடமிருந்து மான் பயப்படுகிறது. (The deer is afraid of the tiger.)

2. ஒரு பொருள் மற்றொரு பொருளைவிட்டுப் பிரியும் போது (விலகும் போது), எதிலிருந்து பிரிகிறதோ, அப்பொருள் பிரிகின்ற பொருளை ஒப்பிடுகையில் உறுதியானது ,அப்பொருள் ஐந்தாம் வேற்றுமை (Ablative case ) யில் அமையும். (When an object is separated from another, the word denoting the thing from which something is separated and which is comparatively stable (the first substratum of the action of separation), gets the Ablative case)

उदा – वृक्षात् पर्णं पतति ! (vṛkṣāt parṇaṁ patati |) or

वृक्षतः पर्णं पतति ! (vṛkṣataḥ parṇaṁ patati |)

உதா – மரத்திலிருந்து இலை விழுகிறது. (From the tree the leaf falls.)

3. बहिः (bahiḥ)வெளியே , आरभ्य ( ārabhya)ஆரம்பித்து , पूर्वः ( pūrvaḥ )முன்பு , परः ( paraḥ)

பின்பு, श्रेष्ठः ( śreṣṭhaḥ) மேலவர் ஆகிய வார்த்தைகளின் உபயோகத்தின்போது , ஐந்தாம் வேற்றுமையை(Ablative case ) பயன்படுத்தவேண்டும்.
उदा – देवालयात् बहिः भक्ताः सन्ति ! (devālayāt bahiḥ bhaktāḥ santi |)

देवालयतः बहिः भक्ताः सन्ति ! (devālayataḥ bahiḥ bhaktāḥ santi |)

உதா – கோவிலின் வெளியே பக்தர்கள் இருக்கிறார்கள். (Devotees are outside the temple.)

மேலே உள்ள விதிகளை மனனம் செய்துகொள்ளவும். तः என்பதை ஒருமையில் மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

சங்கரன் (शङ्करः) பெங்களூருலிருந்து தொடங்கி தென்பாரத பிரயாணம் சென்றார். அவன் எங்கெங்கு சென்றான் என்று கீழேயுள்ள வரைபடத்தைப் பார்த்து எழுதவும்.

उदा – शङ्करः बेङ्गलूरुतः शृङ्गेरीं गतवान् ! (śaṅkaraḥ beṅgalūrutaḥ śṛṅgerī gatavān |)

உதா – சங்கரன் பெங்களூரிலிருந்து சிருங்கேரி சென்றார். (Shankaran went to Sringeri from Bangalore.)
இதேபோல் மற்ற வாக்கியங்களை அமைக்கவும்.
1. ———————————————— गतवान् !

2. —————————————- गतवान् !

3. —————————————— गतवान् !

4. ——————————————- गतवान् !

5. ——————————————- गतवान् !

6. ———————————————- गतवान् !

7. —————————————- गतवान् !

8. ———————————————– गतवान् !

9. ————————————- बेङ्गलूरु आगतवान् !
விடைகளைக் கீழே சரிபார்த்துக்கொள்ளவும்.

ஐந்தாம் வேற்றுமையின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மனனம் செய்து கொள்ளவும். ’அ’வில் முடியும் ஆண்பால் மற்றும் ஒன்றன்பால் , ‘ஆ’ மற்றும் ‘ஈ’ ல் முடியும் பெண்பால் ஆகியவற்றில் ஒருமையில் மட்டும் வாக்கியங்கள் அமைத்து உரத்துப்படிக்கவும். அட்டவணையை print செய்துவைத்துக் கொள்ளவும்.

एकवचनम्

बहुवचनम्
अकारान्त: पुंलिङ्गे (राम:)

रामात् (rāmāt) रामेभ्यः (rāmebhyaḥ)
अकारान्त: नपुंसकलिङगे (वनम्)

वनात् (vanāt) वनेभ्यः (vanebhyaḥ)
आकारान्तः स्त्रीलिङ्गे (रमा)

रमायाः (ramāyāḥ) रमाभ्यः (ramābhyaḥ)

ईकारान्तः

स्त्रीलिङ्गे (नदी)

नद्याः (nadyāḥ) नदीभ्यः (nadībhyaḥ)
'तद् शब्दः'

पुंलिङ्गे (सः)

तस्मात् (tasmāt) तेभ्यः (tebhyaḥ)
'तद् शब्दः'

स्त्रीलिङ्गे (सा)

तस्याः

(tasyāḥ)

ताभ्यः (tābhyaḥ)
'तद् शब्दः'

नपुंसकलिङगे (तत्)

तस्मात् (tasmāt)

तेभ्यः (tebhyaḥ)

'एतद् शब्दः'

पुंलिङ्गे (एषः)

एतस्मात (etasmāt) एतेभ्यः

(etebhyaḥ)

'एतद् शब्दः'

स्त्रीलिङ्गे (एषा)

एतस्याः (etasyāḥ) एताभ्यः (etābhyaḥ)
'एतद् शब्दः'

नपुंसकलिङगे (एतत्)

एतस्मात (etasmāt) एतेभ्यः (etebhyaḥ)
'किम् शब्दः'

पुंलिङ्गे

कस्मात् (kasmāt) केभ्यः (kebhyaḥ)
'किम् शब्दः'

स्त्रीलिङ्गे

कस्याः

(kasyāḥ)

काभ्यः (kābhyaḥ)
'किम् शब्दः'

नपुंसकलिङगे

कस्मात् (kasmāt) केभ्यः (kebhyaḥ)

'अस्मद्

शब्दः' त्रिलिङ्गकः (अहम्)

मत् (mat) अस्मत्

(asmat)

'युष्मद्

शब्दः' त्रिलिङ्गकः (त्वम्)

त्वत् (tvat) युष्मत् (yuṣmat)

1. शङ्करः शृङ्गेरीतः धर्मस्थलम गतवान !

2. शङ्करः धर्मस्थलतः मङ्गलूरुनगरं गतवान !

3. शङ्करः मङ्गलूरुतः अनन्तशयनम् गतवान !

4. शङ्करः अनन्तशयनतः कन्याकुमारीं गतवान !

5. शङ्करः कन्याकुमारीतः रामेश्वरं गतवान !

6. शङ्करः रामेश्वरतः पाण्डिचेरीं गतवान !

7. शङ्करः पाण्डिचेरीतः चेन्नैनगरं गतवान !

8. शङ्करः चेन्नैतः तिरुपतिं गतवान !

9. शङ्करः तिरुपतितः बेङ्गलूरुनगरं आगतवान !

இவ்வாரப் புதிய வார்த்தைகளை மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்வோமா?
इतः (itaḥ) – இங்கிருந்து

ततः ( tataḥ ) – அங்கிருந்து

कुतः ( kutaḥ) – எங்கிருந்து

इतस्ततः ( itastataḥ) – இங்குமங்கும்

அந்தந்த வாரப் பாடங்களை உடனுக்குடன் படித்துப் பயன்பெறவும். தினமும் 30 நிமிடங்கள் சமஸ்கிருதம் கற்றுக் கொள்வதற்காக ஒதுக்கவும். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஒரு தாளில் எழுதிவைத்துக் கொள்ளவும். பிறகு திண்ணை பத்திரிக்கைக்கோ அல்லது saradambals@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும்.

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts