சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் “இரண்டாம் வேற்றுமை” பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். கீழேயுள்ள செய்வினை (Active Voice) வாக்கியத்தை உரத்துப் படிக்கவும்.

बाल: पाठं पठति ! (bālaḥ pāṭhaṁ paṭhati)
சிறுவன் பாடத்தைப் படிக்கிறான்.

இதில் पठति (paṭhati) படிக்கிறான் என்பது क्रियापदम् (kriyāpadam) வினைச்சொல். இந்த வினைச்சொல்லுடன் कः?, का ?, किम्? [kaḥ? , Kā ?, kim ? ] எவன், எவள், எது அல்லது யார்? என்ற கேள்வியை எழுப்பினால் கிடைக்கும் பதில் ,”எழுவாய்” (कर्ता) kartā – Subject.

कः पठति ? (kaḥ paṭhati ?) யார் /எவன் படிக்கிறான்?
बालः पठति ! (bālaḥ paṭhati !) சிறுவன் படிக்கிறான்.

இப்போது எதை ? யாரை ? அல்லது எங்கே ? (कः ?, किम्? , कुत्र ?) ‘what’ ‘whom’ or ‘where’ ? என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதிலே “செயப்படுபொருள்” (कर्मपदम्) Object ஆகும்.
“ஐ” இரண்டாம் வேற்றுமை உருபு.

बालः किं पठति ? (bālaḥ kiṁ paṭhati ?)
சிறுவன் எதைப் படிக்கிறான் ? (What does the boy read?)
बालः पाठं पठति ! (bālaḥ pāṭhaṁ paṭhati !)
சிறுவன் பாடத்தைப் படிக்கிறான். (He reads a lesson)

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை உரத்துச் சொல்லி மனனம் செய்துகொள்ளவும்.

विद्यालय: (vidyālayaḥ) பள்ளிக்கூடம் ( school)

ग्रन्थालयः (granthālayaḥ) நூலகம் (library)

देवालयः (devālayaḥ) கோவில் (temple)
कार्यालयः (kāryālayaḥ) அலுவலகம் (office)
आपणः (āpaṇaḥ) கடை (shop)

रेल्स्थानकम् (relsthānakam) ரயில் நிலையம் (railway station)
चित्रमन्दिरम् (citramandiram) திரையரங்கு (cinema theatre)

उद्यानम् (udyānam) பூங்கா (park)

प्रदर्शिनी (pradarśinī) கண்காட்சி (exhibition)

மேலே உள்ள படத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தையும் பார்த்து வாக்கியங்கள் அமைக்கவும்.

१. मम मित्रं विद्यालयं गच्छति ! (mama mitraṁ vidyālayaṁ gacchati !)
என் நண்பன் பள்ளிக்கூடம் செல்கிறான்.

२. मम मित्रं _______ ______ !
३. मम मित्रं ________ ________ !
४. मम मित्रं ________ ________ !
५. मम मित्रं _________ ________ !
६. मम सखी ________ _________ !
७. मम मित्रं __________ _________ !
சமஸ்கிருதத்தில் பொருள்கள் ஒருமை (एकवचनम् – Singular ) பன்மை (बहुवचनम् – Plural) இருமை (द्विवचनम् -Dual)என்று மூன்றுவிதமாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆண்பால்,( पुंलिङ्गः) பெண்பால் (स्त्रीलिङ्गः)மற்றும் ஒன்றன்பால் (नपुंसकलिङ्गः) என்பவை ஒருமை எண்ணிலும் பலர்பால் ,பலவின்பால் என்பவை பன்மையிலும் உள்ளன. தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை என்ற மூன்றில் ஏதேனும் ஒரு இடத்தைக் கொண்டு அமையும்.

“அ” என்ற எழுத்தில் முடியும் ஆண்பால் சொற்கள்(अकारान्तः पुंलिङ्गः) ,”அ” என்ற எழுத்தில் முடியும் ஒன்றன்பால் சொற்கள் (अकारान्तः नपुंसकलिङ्गः),“ஆ” மற்றும் “ஈ” என்ற எழுத்தில் முடியும் பெண்பால் சொற்களின் (आकारान्तः , ईकारान्तः – स्त्रीलिङ्गः) இரண்டாம் வேற்றுமை ஒருமையிலும், பன்மையிலும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் சுட்டுப் பெயர்களாகிய तद् (सः/ सा/ तत्) , एतद् (एष:/एषा/एतत्), किम् (कः/का/किम्) अहम् ,भवान् ,भवती சொற்களின் இரண்டாம் வேற்றுமையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மனனம் செய்து கொள்ளவும்.

पुंलिङ्गे स्त्रीलिङ्गे नपुंसकलिङ्गे

अकारान्तः (राम:) रामम् – रामान् वनम् – वनानि
(rāmam – ramān) (vanam – vanāni)

आकारान्तः (रमा) रमाम् – रमा:
(ramām – ramāḥ )

ईकारान्तः (नदी) नदीम् – नदीः
( nadīm – nadīḥ)

दकारान्तः (’तद’ शब्दः) तम् – तान् ताम् – ताः तत् – तानि
( tam – tān) (tām – tāḥ) (tat – tāni)

दकारान्तः (’एतद्’शब्दः) एतम् – एतान् एताम् – एताः एतत् – एतानि
(etam – etān) (etām – etāḥ) (etat – etāni)

मकारान्तः (’किम्’शब्दः) कम् – कान् काम् – काः किम् – कानि
(kam – kān) (kām – kāḥ) (kim – kāni)

तकारान्तः (’भवत ‘ शब्दः) भवन्तम् – भवतः
(bhavantam – bhavataḥ)

दकारान्तः त्रिलिङ्कः ’अस्मद्’ शब्दः (अहम्) माम् – अस्मान्
(mām – asmān)

இந்த வாரமே அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும். அடுத்த வாரம் இவைகளை உபயோகப்படுத்தி வாக்கியங்களை அமைப்போம்.

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts