சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் அன்றாட கலந்துரையாடலில் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களை வீட்டிலும், நண்பர்களுடனும், சக பணியாளர்களுடன் உரையாடும்போதும் உபயோகப்படுத்துங்கள். சமஸ்கிருதத்தை கலந்துரையாடல் வாயிலாக பயிற்சி செய்யவும். கீழேயுள்ள இரண்டு நண்பர்களின் கலந்துரையாடலை உரத்துப்படிக்கவும்.

रामः – “हरिः ओम् , सुप्रभातम् !” (“ hariḥ om , suprabhātam!”)
ராம : – “ஹலோ , காலை வணக்கம்.”

केशवः – “नमस्ते श्रीमन् ! स्वागतम् , आगच्छतु , उपविशतु !” (“namaste śrīman ! svāgatam , āgacchatu , upaviśatu !” )
கேசவ : – “ஹலோ! நல்வரவு ,வாருங்கள் ,உட்காருங்கள்.”

रामः – “धन्यवादः !” (“dhanyavādaḥ “)
ராம :– “நன்றி!”

केशवः – “सर्वम् कुशलं वा?” (“sarvaṁ kuśalaṁ vā ?” )
கேசவ : _ “எல்லோரும் நலமா?”

रामः _ “आम्, कुशलम् ! भवान् एतत् पुस्तकं स्वीकरोतु !” ( “ām kuśalaṁ ! bhavān etat pustakaṁ svīkarotu !”)
ராம : : – “ஆம், நலம் . நீர் (நீங்கள்) இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் !”

केशवः – “कथम् अस्ति एतत् पुस्तकम् ?” (“katham asti etat pustakam ?”
கேசவ : – “எப்படி இருக்கிறது இந்தப் புத்தகம் ?”

रामः – “समीचीनम् अस्ति ! भवान् अपि पठतु !” (“samīcīnam asti ! bhavān api paṭhatu !”)
ராம : – “நன்றாக இருக்கிறது. நீர் (நீங்கள்) கூடப் படியுங்கள்.”

केशवः – “अस्तु , अनन्तरं पठामि !” ( “astu , anantaraṁ paṭhāmi !”)
கேசவ : – “சரி , பிறகு படிக்கிறேன். ”

रामः – “अहं गच्छामि !” (“ahaṁ gacchāmi !”)
ராம: – “நான் செல்கிறேன்.”

केशवः – “तिष्ठतु , पानीयं स्वीकरोतु !” (“tiṣṭhatu , pānīyaṁ svīkarotu !”)
கேசவ : – “ நில்லுங்கள். இந்த நீரை (தேநீர்(அ) காபி) வாங்கிக்கொள்ளுங்கள்.”

रामः – “क्षम्यताम् , मास्तु !” (“kṣamyatām , māstu !”)
ராம : – “மன்னியுங்கள். வேண்டாம்.”

केशवः – “किञ्चित् स्वीकरोतु !” (“kiñcit svīkarotu !”)
கேசவ : – “ கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்.”

रामः – “अस्तु , धन्यवादः !” ( “astu ,dhanyavādaḥ !”)
ராம :- “சரி, நன்றி.”

केशवः – “शर्करा अधिका अस्ति किल !” (“śarkarā adhikā asti kila !”)
கேசவ :- “சர்க்கரை அதிகமாக இருக்கிறதல்லவா.”

रामः _ “चिन्ता मास्तु ! (पिबति) अहम् आगच्छामि, नमस्कारः !” ( “cintā māstu ! (pibati) aham āgacchāmi , namaskāraḥ !”)
ராம :- “கவலை வேண்டாம். (பருகுகிறார்) நான் வருகிறேன், நமஸ்காரம்.”

केशवः – “ नमस्कारः ” (“ namaskāraḥ !”)
கேசவ:- “நமஸ்காரம்”

இரண்டு அல்லது மூன்று முறை உரத்துப் படித்துப் பின் புதிய வார்த்தைகளை மனனம் செய்துகொள்ளவும். இவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேறு சில புதிய வார்த்தைகளையும் மனனம் செய்து கொள்ளவும். இவையனைத்தும் நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

हरि: ओम् (hariḥ om) – ஹலோ (Hello)
नमस्ते / नमस्कार: (namaste /namaskāraḥ) – நமஸ்காரம் (Namaste)
सुप्रभातम् (suprabhātam) – காலை வணக்கம் (Good Morning)
शुभमध्याह्न: (śubhamadhyāhnaḥ) – பகல் வணக்கம் (Good Afternoon)
शुभसन्ध्या (śubhasandhyā) – மாலை வணக்கம் (Good Evening)
शुभरात्रि: (śubharātriḥ) – இரவு வணக்கம் (Good Night)
धन्यवादः (dhanyavādaḥ) – நன்றி (Thanks)
स्वागतम् (svāgatam) – நல்வரவு (Welcome)
मान्ये /आर्ये (mānye / ārya) – மதிப்பிற்குறிய (பெண்களுக்கு) (Madam)
श्रीमन् (śrīman) – மதிப்பிற்குறிய (ஆண்களுக்கு) (Sir)
अस्तु (astu) – சரி (All right /OK)
कृपया (kṛpayā) – தயவுசெய்து (Please)
चिन्ता मास्तु (cintā māstu) – கவலை வேண்டாம் (Don’t worry)
क्षम्यताम् (kṣamyatām) – மன்னிக்கவும் (Excuse me)
पुनः मिलामः (punaḥ milāmaḥ) – பிறகு சந்திப்போம் (See you again)
साधु साधु (sādhu sādhu) – மிக நன்று (Very good)
उत्तमम् (uttmam) – நன்று (Good)
बहु समीचीनम् (bahu samīcīnam) – மிக்க நலம் (Very fine)
शुभाशयाः (śubhāśayāḥ) – நல்வாழ்த்துக்கள் (Best wishes)
अभिनन्दनानि (abhinandanāni) – பாராட்டுக்கள் (Congratulations)

சென்ற வாரப்பத்திரிக்கையில் வெளியாகியிருந்த “Key to Transliteration” பகுதியை மறக்காமல் அச்சிட்டு (print) வைத்துக்கொள்ளவும். சமஸ்கிருத வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க “Key to Transliteration” பகுதி மிகவும் அவசியம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தயவுசெய்து அந்தந்த வாரப்பாடங்களை அந்தந்த வாரமே படித்து , புதிய வார்தைகளை மனனம் செய்து அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்துங்கள்.

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts