சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை, …) ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் (कदा ?) கதா ? (kadā ?) என்ற வினாச் சொல் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

கீழே அட்டவணையில் உள்ளவற்றை உரத்துச் சொல்லி மனப்பாடம் செய்துகொள்ளவும். இவையனைத்தும் பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுபவை.

अद्य (adya) – இன்று

श्वः (śvaḥ) – நாளை

परश्वः (paraśvaḥ) – நாளை மறுநாள்

प्रपरश्वः (praparaśvaḥ) – நாளை மறுநாளுக்கு மறுநாள்

ह्यः (hyaḥ) _ நேற்று

परह्यः (parahyaḥ) – நேற்று முன்தினம்

प्रपरह्यः (praparahyaḥ) – நேற்று முன்தினத்திற்கு முன்தினம்

அடுத்து கிழமைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? நம்மில் பலருக்கு இந்தப் பெயர்கள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பேச்சு வழக்கில் இருப்பவைதான்.

शनिवासरः (śanivāsaraḥ) – சனிக்கிழமை

भानुवासरः (bhānuvāsaraḥ) – ஞாயிற்றுக்கிழமை

सोमवासरः (somavāsaraḥ) – திங்கட்கிழமை

मङ्गलवासरः (maṅgalavāsaraḥ) – செவ்வாய்க்கிழமை

बुधवासरः (budhavāsaraḥ) – புதன்கிழமை

गुरुवासरः (guruvāsaraḥ) – வியாழக்கிழமை

शुक्रवासरः (śukravāsaraḥ) – வெள்ளிக்கிழமை

மேலேயுள்ள கிழமைகளை உரத்துச்சொல்லி மனனம் செய்துகொள்ளவும். இப்போது இவற்றுடன் कदा ? (kadā ?) கதா ? என்ற வினாச் சொல்லைத் தொடுத்துக் கேள்விகள் அமைப்போமா?

अद्य सोमवासरः ! मङ्गलवासरः कदा ? (adya somavāsaraḥ ! maṅgalavāsaraḥ kadā ?)

இன்று திங்கட்கிழமை. செவ்வாய்க்கிழமை எப்போது?

मङ्गलवासरः श्वः ! (maṅgalavāsaraḥ śvaḥ )

செவ்வாய்க்கிழமை நாளை.

अद्य भानुवासरः! बुधवासरः कदा ? (adya bhānuvāsaraḥ ! budhavāsaraḥ kadā ? )

இன்று ஞாயிற்றுக்கிழமை. புதன்கிழமை எப்போது?

बुधवासरः प्रपरश्वः ! (budhavāsaraḥ praparaśvaḥ)

புதன்கிழமை நாளை மறுநாளுக்கு மறுநாள்.

अद्य गुरुवासरः ! मङ्गलवासरः कदा? (adya guruvāsaraḥ ! maṅgalavāsaraḥ kadā ?)

இன்று வியாழக்கிழமை. செவ்வாய்க்கிழமை எப்போது?

मङ्गलवासरः परह्यः! (maṅgalavāsaraḥ parahyaḥ)

செவ்வாய்க்கிழமை நேற்று முன்தினம்.

अद्य षोडशदिनाङ्कः ! पञ्चदशदिनाङ्कः कदा? (adya ṣoḍaśadināṅkaḥ pañcadaśadināṅkaḥ kadā ?)

இன்று பதினாறாம் தேதி. பதினைந்தாம் தேதி எப்போது?

पञ्चदशदिनाङ्कः ह्यः ! ( pañcadaśadināṅkaḥ hyaḥ !)

பதினைந்தாம் தேதி நேற்று.

अद्य २४ तमदिनाङ्कः ! २६ तमदिनाङ्कः कदा ? (adya 24 tamadināṅkaḥ ! 26 tamadināṅkaḥ kadā?)

இன்று 24 ஆம் தேதி. 26ஆம் தேதி எப்போது?

२६ तमदिनाङ्कः परश्वः ! (26 tamadināṅkaḥ paraśvaḥ !)

26ஆம் தேதி நாளை மறுநாள்.

“தம” (th) என்ற சொல்லை எண் 20 க்கும் அதற்கு மேல் உள்ள எண்களுக்கும்தான் சேர்க்கவேண்டும். दिनाङ्कः ( dināṅkaḥ ) என்றால் “தேதி”.

அடைமொழியில் எழுத்துப்பெயர்த்தலில் (transliteration) கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படிப்படிக்க வேண்டும் என்பதைக் கீழேயுள்ள அட்டவணையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். சமஸ்கிருதத்தில் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு மிகவும் முக்கியம். தவறாக உச்சரித்தால் வார்த்தையின் பொருளே மாறிவிடும். உதாரணமாக करः (karaḥ) “கரஹ” என்றால் “உள்ளங்கை” என்று பொருள். खरः (kharaḥ) “க்கரஹ” என்று “க்”கை அழுத்திச் சொன்னால் “கழுதை” என்று பொருள். எனவே இனிவரும் பாடங்களில் எழுத்துப்பெயர்த்தலிலும் (transliteration) கொடுக்க எண்ணியுள்ளேன். எனவே கீழேயுள்ள அட்டவணையை print செய்து வைத்துக்கொள்ளவும்.

KeytoTransliteration

KeytoTransliteration andPronunciationofSanskritLetters

a (but) (sing) n (numb) ā (mom) c (chunk) p (spin) i (it) ch (catchhim) ph (loophole) ī (beet) j (john) b (bin) u (put) jh (hedgehog) bh (abhor) ū (pool) ñ (bunch) m (much) (rhythm) (start) y (young) e (play) ṭh (anthill) r (drama) ai (high) (dart) l (luck) o (toe) ḍh (godhead) v (vile) au (loud) (under) ś (shove) k (skate) t (path) (bushel) kh (bunkhouse) th (thunder) s (so) g (gate) d (that) h (hum) gh (loghouse) dh (breathe)

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts