சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ரேவதி மணியன்


சென்ற வாரம் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா? விடைகளைக் கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

1. अत्र कार्याणि कुर्वन्ति! ___ र्या ___ ___
இங்கே பணிகள் செய்கிறார்கள் .

2. भवान् कुत्र पठति? वि ___ ___ ___ ये
நீங்கள்/ நீர் எங்கே படிக்கிறீர்கள் ? (நீர் (भवान्) என்பது third person ( प्रथम पुरुष: एक वचनम्) masculine singular)

3. धनम् अत्र रक्षामः! ___ त्त को ___
பணத்தை இங்கே பாதுகாப்போம்.

4. चलनचित्रम् अत्र पश्यतु! ___ त्र ___ न्दि ___
திரைப்படம் இங்கே பார்க்கட்டும்.

5. अत्र विविधानि पुस्तकानि सन्ति! ___ न्था ___ ___
இங்கே பலவிதமான புத்தகங்கள் இருக்கின்றன.

6. जगन्नाथ मन्दितम् अत्र अस्ति! ___ र्या ___
ஜகன்னாதர் கோவில் இங்கே இருக்கிறது.

7. मशी कुत्र अस्ति? ___ ___ न्याम्
மை எங்கே இருக்கிறது ?

कदा ? எப்போது ?

எப்போது? என்ற கேள்வியின் பதில் ஏழாம் வேற்றுமையில் (இல்,கண், உள், இடம் –உருபுகள்) அமையும் (locative case) . இதுபற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். (வேற்றுமை உருபுகள் பற்றி பிறகு விரிவாகப் படிப்போம்)

भवान् कदा उत्तिष्ठति ?
நீர் எப்போது எழுகிறீர் ? (நீர் (भवान्) என்பது ( प्रथम पुरुष: पुंलिङ्ग एक वचनम्) third person masculine – singular)

अहं पञ्चवादने उत्तिष्ठामि !
நான் ஐந்து மணிக்கு எழுகிறேன்.

भवान् कदा विद्यालयं गच्छति ?
अहं नवादने विद्यालयं गच्छामि !

सूर्योदयः कदा भवति?
சூர்யோதயம் எப்போது நிகழ்கிறது ?

सूर्योदयः प्रातः काले भवति !
சூர்யோதயம் அதிகாலையில் நிகழ்கிறது.

भवति कदा पठति ? (Third person feminine singular – प्रथम पुरुष: स्रीलिङ्ग एक वेचनम्)
நீங்கள் (நீர்) எப்போது படிக்கிறீர்?

अहं सप्तवादने पठामि !
நான் ஏழுமணிக்குப் படிக்கிறேன்.

सीता कदा नृत्याभ्यासं करोति ?
சீதா எப்போது நடனப்பயிற்சி செய்கிறாள்?

सीता सायं नृत्याभ्यासं करोति !
சீதா மாலையில் நடனப்பயிற்சி செய்கிறாள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைப் பலமுறை படித்து உரத்துச் சொல்லிப் பழகுங்கள்.

கீழே உள்ள வாக்கியங்களைப் படித்து அதற்கு கதா ( कदा ? ) என்ற வினாச் சொல்லை பயன்படுத்தி வினா தொடுங்கள். (சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 11 ஐப் பார்த்து நேரத்தை( समयः ) எப்படிச் சொல்லவேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்)

वेङ्कटेशः षड्वादने योगासनं करोति !

________ _____ __________ ________ ?

माता दशवादने पाकं करोति !

_____ ______ _______ ______ ?

सा प्रातः काले पूजां करोति !

_____ ______ ______ ______ ?

अहं मध्याह्ने भोजनं करोमि !

_____ _____ ______ ______ ?

स्वर्णा पादोनदशवादने निद्राति !

______ ______ ________ ?

மேலேயுள்ள வெற்றிடத்தின் விடைகளைச் சரிபார்த்துக் கொள்வோமா?

1. कार्यालये

2. विद्यालये

3. वित्तकोषे

4. चित्रमन्दिरे

5. ग्रन्थालये

6. पुर्याम्

7. लेखन्याम्

அடுத்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை …)
ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் கதா (कदा ?) என்ற வினைச் சொல் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts