சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

ரேவதி மணியன்


சென்ற இதழில் कति கதி (how many?) என்ற கேள்வி சொல்லை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்த்தோம்.

இந்த வாரம் कुत्र எங்கே? (Where) என்ற கேள்வி சொல்லைப் பற்றி அறிந்து கொள்வோம்.

कुत्र पुस्तकम् अस्ति? எங்கே புத்தகம் இருக்கிறது?

स्यूते पुस्तकम् अस्ति ! பையில் புத்தகம் இருக்கிறது.

ग्रन्थालये पुस्तकम् अस्ति ! நூலகத்தில் புத்தகம் இருக்கிறது.

हस्ते पुस्तकम् अस्ति ! கையில் புத்தகம் இருக்கிறது.

மேற்சொன்ன வாக்கியங்களை உரக்கப் படிக்கவும்.

अकारान्त पुंलिङ्ग शब्दाः (“அ” என்ற எழுத்தில் முடியும் ஆண்பால் வார்த்தைகள்) மற்றும் नपुंसकलिङ्ग शब्दाः (“ம்” என்ற எழுத்தில் முடியும் neuter வார்த்தைகள்)

स्यूतः – स्यूते (பை – பையில்)
आपणः – आपणे (கடை – கடையில்)
हस्तः – हस्ते (கை – கையில்)

गृहम् – गृहे
नगरम् – नगरे
चित्रमन्दिरम् – चित्रमन्दिरे (சினிமாதியேட்டர் – சினிமாதியேட்டரில்)
उपाहारगृहम् – उपाहारगृहे (உணவு விடுதி – உணவு விடுதியில்)

आकारान्त स्त्रीलिङ्ग शब्दा: (“ஆ” என்ற எழுத்தில் முடியும் பெண்பால் வார்த்தைகள்)

कुत्र पाञ्चालिका अस्ति? பொம்மை எங்கே இருக்கிறது?

उत्पीटिकायां पाञ्चालिका अस्ति !
पेटिकायां पाञ्चालिका अस्ति !
निधानिकायां पाञ्चालिका अस्ति !

उत्पीटिका –उत्पीटिकायाम् (டேபிள் – டேபிளில்)

कपाटिका – कपाटिकायाम् (அலமாரி)
पेटिका – पेटिकायाम् (பெட்டி – பெட்டியில்)

निधानिका – निधानिकायाम् (அலுமாரி (shelf) – அலுமாரியில்)

ईकारान्त स्त्रीलिङ्ग शब्दाः (“ஈ” என்ற எழுத்தில் முடியும் பெண்பால் வார்த்தைகள்)

कुत्र मन्दिरम् अस्ति? (கோவில் எங்கே இருக்கிறது? )

काश्यां मन्दिरम् अस्ति !

उज्जयिन्यां मन्दिरम् अस्ति !

पुर्यां जगन्नाथ मन्दिरम् अस्ति !

कन्याकुमार्यं मन्दिरम् अस्ति !

கீழே உள்ள மாற்றங்களை கவனியுங்கள்.

काशी – काश्याम् (காசி – காசியில்)
उज्जयिनी – उज्जयिन्याम्
पुरी – पुर्याम्
कन्याकुमारी – कन्याकुमार्याम्

கீழ்கண்ட அட்டவணையை கவனியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.

मम पिता
सहोदर:
कार्यालयः
वित्तकोषः
ग्रन्थालय:
विध्यालय:
यन्त्रागारम्
दूरवाणीविनिमयकेन्द्रम्
कार्यं करोति !

कार्यालयः – அலுவலகம்
वित्तकोषः – வங்கி
ग्रन्थालय: – நூலகம்
विध्यालय: – பள்ளி
यन्त्रागारम् – தொழிற்சாலை
दूरवाणीविनिमयकेन्द्रम् – தொலைபேசி இணைப்பகம்

मम पिता कार्यालये कार्यं करोति ! இதுபோல வாக்கியங்களை எழுதி அவற்றை உரத்து கூறுங்கள். புதிய வார்த்தைகளை மனதில் கொண்டு மனப்பாடமாக உரத்து கூறுங்கள்.

(இந்த வாரத்திலிருந்து ரேவதி மணியன் இந்த தொடரை தொடர்வார்)

Series Navigation

author

ரேவதி மணியன்

ரேவதி மணியன்

Similar Posts