வெள்ளித்திரை

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

பாலா



மொழியில் எல்லாமே கச்சிதமாக இருந்தது போல் தோன்றியது. இதில் கொஞ்சம் முன்னே பின்னே.. இசை, பாடல்கள் அப்புறம் க்ளைமேக்ஸ் –
இவை மூன்றும் வெள்ளித்திரையின் பலவீனங்கள்.

இதில் ஒரு வித்தியாசமான ஒரு கோணம் தோன்றியது. இராமாயணக் கண்ணாடி அணிந்து பார்த்தால், வெள்ளித்திரை கொஞ்சம்
வேறு மாதிரித் தெரிகிறது. இராமாயணத்தில், இராவணன் திருடுவது சீதை. இங்கே கதை. இப்படித்தான் ஒரு ஆதர்ச மனிதன்
இருக்க வேண்டும் என்பது போல் சரவணன் – கதையின் இராமன். என்னாலேயே வாழ்க்கையை வெல்ல முடியும் – ஆனால்,
இராமன் வெல்ல வேண்டும் என்பதற்காக (இராமன் வாளுக்கு மாசென்று வீசினேன்..), அசோக வனம் (அண்ணன் வீடு)
செல்லும் சீதை. சில முரண்களும் உண்டு. ஒரிஜினல் இராவணன் அறிவாளி. கன்னையன் அறிவிலி. அங்கே அனுமன் சீதையைத்
தேடி அசோக வனம் சென்றான். இங்கே, அனுமன் வேடம் போடும் முஸ்லீம் (முரணுக்குள் முரண்) நண்பன், சீதையை
அசோக வனத்தில் கொண்டு போய் விடுகிறான். கணையாழிக்கு பதில் செல் போன்.

சரவணனாக வரும் ப்ரிதிவி ராஜ், ஏங்க வைக்கிறார். மிக அற்புதமான நடிப்பு. எதிர்வரும் பெண்ணின் சுடிதார் காற்றில் விலகுவது போல் இயல்பாக வெளிப்பட வேண்டும் சுயம் என்னும் ஜெயமோகனின் வார்த்தைகள் போல, படத்தில், சரவணணின் ஆளுமை
இயல்பாக மெல்ல மெல்ல வெளிப்படுவது மிக அழகு. ப்ரகாஷ்ராஜ் அருவருக்க வைக்கிறார். 7 ஆம் வகுப்பு படிக்கும் என் மகள்
சொன்னாள் “Yuk pa, he is grose” – ப்ரமிக்க வைக்கும் நடிப்பு. கோபிகா என்னும் பெண்மணி மீது நமக்கு வருகிறது மரியாதை. சரத்பாபு, சார்லி, பாஸ்கர் – மூவரின் பாகங்களும் மிகத் திறம்பட உருவாக்கப் பட்டுள்ளன.

DTS என்னும் பெயரில், நம் காதை பொத்திக்கொள்ள வைக்கும் சத்தத்தைத் தவிர்க்கலாம். இந்த genre படங்களுக்கு,
இதயம் வருடும் இசை தேவை. இளையராஜா இருந்திருந்தால்… என பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மொழியின்
இசை-பாடல் combination ம் ரொம்ப நல்லா இருந்தது. ஏன் மாற்றினீர்கள் ப்ரகாஷ்??

படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும், சரவணனின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. Hats off to prithvi and viji!!


bala@cavinkare.com

Series Navigation

author

பாலா

பாலா

Similar Posts