அவியல்

author
0 minutes, 4 seconds Read
This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue


உருளைக்கிழங்கு –1 (பெரியது)

சேப்பங்கிழங்கு –4

பூசனிக்காய் –சிறிய துண்டு

பீன்ஸ் –5

காரட் –1

கொத்தவரைக்காய் –5

பெங்களூர்க் கத்தரிக்காய் –1/4பாகம்

கத்தரிக்காய் –2

புளித்த தயிர் –கால் ஆழாக்கு

பச்சை மிளகாய் –5

தேங்காய்த் துருவல் –2ஸ்பூன்

மஞ்சள் பொடி –1சிட்டிகை

சீரகம் –அரை ஸ்பூன்

கடலைபருப்பு –1ஸ்பூன்

உப்பு –1ஸ்பூன்

சேப்பங்கிழங்கைத் தனியாக வேகவைத்து, தோல் உரித்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி, பீன்ஸ், கொத்தவரை, கேரட் போன்றவற்றைச் சிறிது நீளமாக நறுக்கி, பூசனிக்காய், பெங்களூர்க் கத்தரிக்காய் போன்றவற்றோடு சிறிது மஞ்சள் பொடி போட்டு, கறிகாய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் உப்பு போடவும். நடுநடுவே காய்கறிகளைக் கிளறி விடவும். தண்ணீரை வடிக்கக் கூடாது. இதற்குள் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்துத் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயோடு வைத்து அரைத்துக் கடைசியில் சீரகத்தையும் சேர்த்து அரைத்துக் கொண்டு காய்கறிகள் வெந்தவுடன் சேப்பங்கிழங்கையும் போட்டு அரைத்த விழுதையும் போடவும். சிறிது கொதித்தபின்பு இரண்டு ஸ்பூன் தேங்காயெண்ணெயைக் காயவைத்து அதில் சிறிது கருவேப்பிலையைப் போட்டு, சிறிது பொரித்து, அவியலில் சேர்க்கவும். பின்பு அடுப்பிலிருந்தும் இறக்கி, ஆறிய உடன் தயிர் சேர்க்கவேண்டும். (தயிர் சேர்க்காமலும் அவியல் தயாரிக்கலாம். கடலைப் பருப்பைச் சேர்க்காமல் சீரகம், தேங்காய், பச்சைமிளகாய் இவற்றை மட்டும் அரைத்து அவியலோடு சேர்க்கலாம். மேற்சொன்ன கறிகாய்கள் தவிர வாழைக்காய், அவரைக்காய், தக்காளிக்காய், வெள்ளிக்கிழங்கு போன்றவற்றைச் சேர்த்தும் அவியல் செய்யலாம்.)

Series Navigation

Similar Posts