காற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால் இயங்கும் டர்பைன்களை உருவாக்கி வருகிறார். இவை கடல்தண்ணீரை மிகச்சிறியதுளிகளாக மாற்று காற்றில் தெளிக்கின்றன. இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது மழையை உருவாக்குகிறது. ‘இது வேலை செய்தால், இதன் பயன் மிகவும் அதிகமாக இருக்கும். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதிலிருந்து பாலைவனத்தை பசுமையாக்கும் வரை இதனை உபயோகப்படுத்தலாம் ‘ என்று ஸால்டர் கூறுகிறார்.
இந்த டர்பைன்கள் கட்டுமரம் போன்ற படகுகளில் ஏற்றப்பட்டு உலகத்தின் மிகவும் காய்ந்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மழை உருவாக்குவதை அதிகரிக்கலாம்.
இந்த ஐடியாவில் ஏதும் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று இந்த பொறியியல் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
டர்பைன் சுழற்றுவான்களின் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் திவாலைகள் காற்றில் கலந்து டர்பைன் பின்னால் செல்லலாம். உபரி உப்பு கடலுக்குள் விழுந்துவிடும். ஈரப்பதம் ஏறிய காற்று நிலத்துக்குச் சென்று தாக்கும்போது மழை தோன்றும்.
இது பல உபரி தேவைகளைக் கொண்டிருக்கிறது. காற்று கடலிலிருந்து கடற்கரை நோக்கி அடிக்கவேண்டும். காற்று ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சூடாகவும், நிலத்தை சேரும்போது அது நிலத்திலிருந்து மிக உயரத்துக்கு மேகம் அளவுக்குச் செல்லவேண்டும்.
கணினி மாதிரிகளைக் கொண்டு இந்த கருத்தை பரிசோதிப்பதாகவும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
‘ஈரப்பதம் ஏற்றப்பட்ட காற்று எங்கு செல்லும் என்று நமக்குத் தெரியாது. இது தட்பவெப்பம் குறித்த மிகவும் கடினமான கேள்வி. அதற்காக நாங்கள் கணினி மாதிரியை உபயோகப்படுத்துகிறோம் ‘ என்று கூறினார்.
மாதிரி வெற்றிகரமாக இருந்தால், இதனைக்கொண்டு ஒரு உண்மை நிலவரப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் எல்லோரும் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
பாலைவனங்கள் பாலைவனங்கள்தாம். ஏனெனில் இந்த நிலங்களில் இருக்கும் காற்று இறங்குகிறது. இறங்கும் காற்றின் மூலம் மழை வராது. எவ்வளவுதான் அவற்றுக்குள் ஈரப்பதம் ஏற்றினாலும், இறங்குமுகமான காற்றின் மூலம் மழை வராது ‘ என்று தட்பவெப்பவியலாளரும், டெலிகிராப் பத்திரிக்கை நிருபருமான பிலிப் ஈடன் கூறுகிறார்.
இந்த பரிசோதனையை 15 மாதங்கள் நடத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பயன் இதனை சந்தேகப்படுபவர்களின் இழப்பைவிட அதிகம் என்றும் ஸால்டர் கூறுகிறார்.
- வைரமுத்துக்களின் வானம்-3
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- பாரதீ…
- காதல் கருக்கலைப்பு
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- விடியும்! நாவல் – (14)