கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பான் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவன் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவான்.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++++++
காரணம் (Reasoning)
+++++++++++++++

முதலில் தெரிந்து கொள்
உன் சுய மதிப்பை
அதன்பின் நீ
அழிந்து போக மாட்டாய் !
மூல ஆதாரம் அறிவதே
உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
உண்மைக்
களங்கரை விளக்கு !
வாழ்க்கைத் தோற்றத்துக்கு
மூல ஆதாரம் உணர்வாய் !
அறிவை உனக்கு அளித்துளான்
இறைவன் !
அந்த ஒளியில் நீ
அவனை வழிபடு வதால்
உனக்குத் தெரிந்திடும்
உன் வலுவும் பலவீனமும் !
உன் விழியில் உள்ள தூசி
தொலைவில்
உனக்கே தெரியாது போனால்
பக்கத்து நபர் கண் தூசியைப்
பார்க்க மாட்டாய் !
ஒவ்வோர் நாளும் நீ
உன் மனச் சாட்சியை
உற்று நோக்கு !
குற்றங் களைத் திருத்திடு !
கடமையில் தவறினால்
காரண அறிவும்
கைவிட்டுப் போகும் !
காரண மூலமும்
பொய்யாகிப் போகும் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts