வீடு

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ராம்ப்ரசாத்


பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச்
சுற்றிசுற்றி ரீங்க‌ரித்துக்கொண்டிருக்கிற‌து
தொலைந்து போன‌ த‌ன் வீட்டை
தேட‌த்துவ‌ங்கிய‌ வ‌ண்டொன்று…

வாஸ்து இங்கும் ச‌ரியில்லையோ என்ன‌வோ
ப‌ரிமாற‌ வேண்டிய‌ ஒரு ல‌யிப்பை
அச‌ட்டையாய் வீணாக்கிவிட்டு
அடுத்த‌ ம‌ர‌த்துக்கு தாவ‌
எத்த‌னிக்கிற‌து தன்னியல்பில்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation

author

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்

Similar Posts