வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்.


சேதமாக்கியது .
——————————
இரவின் மன அலறல்
மவுனத்தை சேதமாக்கியது .
கடக்கின்ற கனமேற்றும்
நொடிகள் வெறுமையாக
இறைந்து இருக்கிறது
என் வெற்றிடத்தில் .

தோன்றியறியாத தனிமை
அமைதியை குலைக்கும்
விதமாகவே கண்ணிர் துளியான
நிகழ்வு நடைபெறுகிறது
அப்பழுக்கற்ற அமைதி மேலும்
சூடி கொள்கிறது இந்த இரவின் மனம் .
இதன் மைய நோக்கு விசை
குறிக்கப்படுகிறது விலகிய
கோணம் விரைவிலே
மாற்றியமைக்கப்படலாம்.

இரவில் அகற்றப்படும் புன்னகை
வன்மம் கொண்டே ஒப்பிடப்படுகிறது
சிதறிய சிறு ஒளியில் இரவு தன்
போர்வையை போர்த்தி கொண்டது
இனி செய்ய வேண்டியது இந்த இரவை
கடந்தாக வேண்டும் என்பதே .

————————————————————————————————
இன்றும் அப்படியே .
——————————————-

துருத்திய கனவொன்று
பகலிலும் காண கிடக்கிறது
இயல்பை மிஞ்சும் அளவில்
சில நூற்றாண்டின் வன்மம்
மேலும் வலிமையடைகிறது .

அதன் உறுதியான சிதைவை
விருப்பும் காரணம்
இன்னும் உருவாக்கப்படவில்லை .
தோன்றலின் அமைவு எப்பொழுதும்
சந்தேகத்தின் மீதே அமர்த்தப்பட்டிருக்கிறது .

எழுகின்ற நம்பிக்கை வெறும்
சொல்லாகவே உணர காலம்
எதையும் விட்டு வைக்கவில்லை
இன்றும் அப்படியே .

வளத்தூர் தி .ராஜேஷ்.

Series Navigation

author

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts