கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு
************************************

சகோதரா ! பச்சை குத்தும் போது
சகித்துக் கொள் வலியை !
உணர்ச்சி வசப் படாமல்
நச்சு வலியை வெளி யேற்று !
வானமே வணங்கும் உனது
வனப்பை நோக்கி !
மெழுகு வர்த்தி ஏற்றிடக்
கற்றுக் கொள் !
பொழுது புலர்ந்ததும் எழுவாய்
பரிதி யோடு !
உறங்கும் குகையை விட்டுத்
திரும்பிச் செல் !
அப்போது
ஒரு முள் கூட மலர்ந்து
ரோஜாவாய்
உருவா கலாம் !
ஒரு மலர் ஒளி வீசலாம்
ஒன்றிப்
பிரபஞ்சத் தோடு !

++++++++++++++

உன்னிடம் பீற்றிக் கொள்ள
உள்ள தென்ன ?
பணிவோடு உன்னை ஓர்
அணுவாய் நினைத்து கொள் !
இறைவனைப் பற்றிச்
சிறிது அறிவதில் வரும்
சிரமம் என்ன ?
எரிப்பாய் இதனை !
பொறிப்பாய் உன் இதயத்தில்
இறைவன் இருப்பை
நெருப்பில் எழுதி !
தாமிரம் உருகும்
நமக்கு நலம் அளிக்கும்
அமுதம் படைக்க !
ஆதலால் நீயும் உன்னை
உருக்குவாய் அமுதக் கலவையில்
நித்திய வாழ்க்கை
பூமியில்
நிரந்தர மாய் நிலவ !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 29, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts