இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அட்ச ரேகை தீர்க்க ரேகை
******************************
ஊர் ஊராய்
நகரும் வெய்யில்..
எல்லா காலத்திலும்
என்று அஷ்டமி.,
எது பௌர்ணமி…
ஹோரைகளும்
சகட யோகங்களும்
ராகுவாய் கடித்து
கேதுவாய் ஞானமூட்டி
ராஜயோகமும் விபரீதமாய்.
உறைந்துள்ளிருக்கும்
கடலிலிருந்து பெருகி
கூர் பற்களில் உலகமாகவோ
போதனைகள் நிறைந்த
புத்தகமாகவோ ஏந்த
நிர்ணயங்களற்ற
சமூகவெளியில்.
நிலைப்பாடற்ற
பிரதிமைகளுக்கு
நாளானால் என்ன
கோளானால் என்ன..
அட்சரேகை தீர்க்க ரேகையாய்
கற்பனைக் கோடுகள்.

*******************************************************

குறுந்தொ…கை…
**********************

பொதி சுமந்த கழுதையாய்
திணறிய உள்டப்பியில்
வேண்டாத குறுந்தகவலெல்லாம்
விரைந்து குப்பையிலிட்ட கை..
உன் பெயர் சுமந்த தகவல் மட்டும்
உன் வாசம் சுமந்த உடுப்பாய் முகர்ந்து
உள் சேமிக்கிறது திரும்ப….முகர.

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts