வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்



அதன் மீதமே
————————
பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை
தழுவி கொள்வதற்கு முன்
தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல்
சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது
அதன் மீதமே .
பழியின் தீரம் என்னை பிடித்தது
தப்பி விட முயலவில்லை
வன்மம் பெருக்கெடுக்கிறது
காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது
ஒவ்வொருவரின் மீதும் குற்றம்
சுமத்த வாய்ப்பு எளிதாகியது .
——————————————————————————-

அஞ்சுவதில்லை
—————————–
செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில்
தவறின் அறியாமை தன்
புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது
அதனால் உண்டாகுகிற நிதானிக்கும்
தன் மனிப்பை சற்று மேலோட்டமாக
ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும்
நேரம் இருந்து கொண்டே இருப்பதால்
தவறின் செயல் தொடர்கிறது .
இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை
கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .
—————————————————————————–

நாமாவோம்
———————–
தீண்டப்படாத எந்த நினைவையும்
விட்டு வைக்கவில்லை இனி
தவிப்புகளை புரிந்து கொள்கின்ற
ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே .

அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள்
தினமும் வந்து சேர்ந்து விடுகிறது
ஒன்றுபடும் நம் நேசத்தில்
என் தவறுகளும் பொய்மையும்
உன்னிடம் மேன்மையடையக்கூடும் .

என் வரையறையில் உன்னை
காண்பது விட உன் வரைமுறையில்
நம் வாழ்வை காண்போம்
கற்பனையில் சொல்வதாக
எண்ணி விட கூடும் ஆதலால்
நூற்றில் நானோவின் ஒரு
பகுதியை எழுதி விடுகிறேன்
மன்னிப்பாயாக .

நம் தேடல்கள் இனி நாமாவோம்
பெருகி கொள்கின்ற விருப்பம்
பொருந்தும் மனமாகும்.

இன்று வரை நீ யாரென்று
தெரியவில்லை நாளை வரை
காத்திருக்க வைக்க வேண்டுமா
முதல் முறையாக நியாயப்படுத்தி
கொள்கிறது பல நிலைகளுடைய
தன் விருப்பங்கள் .

Series Navigation

author

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts