இருக்கை

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

தேனம்மை லஷ்மணன்


இருக்கை..:-
**************

எனக்கென சில தானியங்கள்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே..

குளிரிலும் இருளிலும் கூட
கதகதப்பாய் ஒரு கூடும்..

அமரும் மரங்கள் தோறும்
பழங்களோ பூக்களோ
ரசிக்க., ருசிக்க..,

இலைகளோ ஏன்
கிளைகளோ மட்டுமே கூட
என்னை ஏந்தி..

கூலி கொடுக்காது
காற்றிலேறி அவ்வப்போது
விண்ணைச் சாடி..

குடல்கள் குதறும்
சில காகங்கள் கண்டு்
வெறுப்பு …
அவை ஆகாயத் தோட்டி
என அறியும்வரை..

பேர் எழுதிக் கிடக்கும்
தானியங்கள் இருக்கும்
காலம் வரை..பறக்கவும்..
பறத்தலைக் கற்பிக்கவும்..

Series Navigation

author

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்

Similar Posts