வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்


மெய்யாகும் சூழ்.

வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே
நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம்
செய்யப்பட்டு வந்திருக்கிறது
உனது எனது பேதமில்லை
ஒன்றிலிருந்து ஒன்றாக
ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும்
நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் .
காண்கின்ற எல்லாவற்றிலும்
கேள்விகளும் பதில்களும்
இவையாகவே தொற்றி கொண்டிருக்கிறது .

இது வரை தோன்றிடாத எண்ணங்களில்
அடங்கி இருப்பவையாக கருதப்படும்
அதன் இயக்கங்கள் யாவற்றிலும்
நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும்
அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் .

கூற்றின் அறம் பொய்க்குமாயின்
தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த
காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது
சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே
தோற்றமளித்து கொண்டிருக்கிறது
இன்றளவும் .

செய்து கொண்டிருப்பவை அனைத்தும்
அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை
ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு
வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும்
காலத்தின் சூழ் மெய்யாகும் .
———————————————————————————————————–
ஒப்பற்ற வெளி .

முடிவில்லா நெறியினை
வழிபட்டு வந்ததன்
வினை
பழியொன்றை என்னில்
சேர்க்கப்பட்டன .

நன் மதிப்பை
குலைக்கும் விதமாக
செயலும் துணை
சேர்ந்ததாக
அறிவிக்கப்பட்டன .

தன்னை அறிய
நேரம் இல்லாத
காரணத்தில்
மற்றவை அறிந்து
கொள்வதன் விருப்பம்
இப்பொழுது
எனக்காகிறது .

தயவு எனக்காகும்
நேரத்தில் மற்றவையை
பரிந்துரை செய்ய
இன்னும் கூடுதல்
பணிவு அவசியமாகிறது .

மொத்தத்தில் சிதறிய
மனங்களை அனைத்தும்
ஒன்று சேர்த்து கொள்கிறது
ஒப்பற்ற வெளி .
————————————————————-
-வளத்தூர் தி .ராஜேஷ்

Series Navigation

author

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts