வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

தி .ராஜேஷ்


மறைக்கப்படுபவையாகிறது

என் பலவீனத்தின் பிரதிபலிப்பு
உங்களை வதம் செய்யாமல்
இருக்கவே ஏற்று கொள்பவை
மறைக்கப்படுபவையாகிறது .

உங்களுக்கென்றே ஒதுக்கியுள்ள
வாழ்வை நிறைவாக்க
இலட்சிய வீறுநடை புரிய
என் இயல்பின் மூலத்தில்
கொள்முதலாக்குகிறது .

செயல் புரிகின்ற
மறு ஆக்கம்
என் வினையினை
சாராமல் இருக்கவே
கற்பிக்கப்படுபவையாகிறது.

மிகைமை உடைய
நியாயம் உங்களுக்காகும்
பொழுது என் சிதைக்கப்பட்ட
பிரபஞ்ச பெருங்கனவு
விழித்து கொண்டே
இருக்கும் உங்களை
விழுங்க .
– தி.ராஜேஷ்

—————————————————-

சூல்நிலையாக்கம்

ஆக்கத்தின் ஆளுமை
பல சிந்தனையின்
ஒரு வடிவை செய்வதற்கும்
எடுத்துரைக்கவும்
வாய்ப்புண்டு .

அதனால் உணர்வதற்கு
வழிவகை இருப்பதாக இன்றும்
நம்பிக்கைக்கான விதை
வேரூன்றப்படுகிறது என்னில் .

உடைக்கப்பட்ட பொருளின்
சிதறல்கள் ஒடுக்கப்படுவதால்
அதன் தடயத்தின் இயல்பை
மீறுவது கேள்வியின் ஊடே
உங்கள் அகத்தில்
ஏற்றப்படுகிறது .

மதிக்கப்படும் தீஞ்செயல்
ஒன்றை இதற்கு மேலும்
நான் புனிதப்படுத்த
தேவையில்லை
அவையாவும் ஏற்கனவே
விட்டொழியப்பட்ட
காரணத்தால் இன்றைய
உங்களின் கேள்விகள்
தேவையாய் இருக்கவில்லை

பிறகு அறிய போகும் பதில்
கண்டிப்பாக அப்பொழுது
உங்களுக்கானாதாக
இருந்திருக்காது.

ஒரு சூல்நிலையாக்கம்
உங்களில் நுழைந்து விடில்
மீண்டு விடுதல்
மற்றுமொரு வழியில்
உங்கள் கவனம்
சிதறடிக்கப்படுகிறது
உங்கள் சுயமும்
இதில் அடங்கி இருக்கலாம்.
-தி .ராஜேஷ்

Series Navigation

author

தி .ராஜேஷ்

தி .ராஜேஷ்

Similar Posts