கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“மனிதனுக்குக் காமப் பசியும் வயிற்றுப் பசியும் மறைந்து போகும் காட்சிப் பிம்பங்கள்.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

முடிவற்ற நீடிப்பு
மெய்ப்பாடாய் இருப்பது போல்
இந்த வினை யெல்லாம்
உண்மையே ! ஆயினும்
காம உறுப்பு,
கும்பியின் குடலை மட்டுமே
நம்பிடும் சிலருக்கு அவை
மதத்தின்
மாயக் கனவுகள் !
அறிமுகம் செய்யாதே சிலரை
உன் தோழனுக்கு !

++++++++++++++

பிறருக்கு இது தெரியும் :
காமப் பசியும்
வயிற்றுப் பசியும்
மறைந்து போகும் காட்சிப்
பிம்பங்கள் !
பிடிவாதக் காரன்
உன் தோழன் !
குன்று போல் அசையாதவன் !
மதவாதிகள் செல்லட்டும்
அவரது
ஆலயங் கட்கு !
நாம் செல்வோம்
நமது ஆலயங் களுக்கு !
நாத்திகர் என்று
பீற்றிக் கொள்வோ ருடனும்
கடவுளை
நம்பா தவருடனும்
நீண்ட பேச்சு வார்த்தை
வேண்டாம் !

+++++++++++++

காலி•ப் விழைந்தான்
கன்னி யோடு
காம உறவு கொள்ள !
எண்ணியதும்
கன்னியை நெருங்குவான்
காலி•ப் !
பெண்ணழகு தாக்கி
சிந்தை மங்கிய உடனே
முந்தி யெழும்
ஆணுறுப்பு !

++++++++++++++

பெண் மேலேயும்
காலி•ப் கீழேயும்
படுக்கையில் கிடக்க
கடவுள் குரல் மேலிருத்து
கட்டளை யிட்டது
காமக் காட்சியை உடனே
நிறுத்தச் சொல்லி !
எலி அரவம் கேட்பது போல்
இடையூறு நேர்ந்தாலும்
முடங்கி விடும்
ஆணுறுப்பு !
அடங்கி விடும் காமம் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 21, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts