கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர் ஆறோட்டம் உன்னுள்ளே எழுகிறது. அப்போது புது மலர்ச்சியும், ஆழ்ந்த பூரிப்பும் அந்த ஆறோட்டத்தின் சின்னங்களாய் வெளிப்படும்.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

“உன் உடம்பு முழுத் தோற்றம்
ஓர் முகம் பார்க்கும்
கண்ணாடி ஆகும் !
அதனுள்ளே கண்களும்,
ஆன்மீக மூச்செடுப்பும்
காணலாம் !
உன் செவி
இழுத்துச் செல்லட்டும்
உன்னை
உனது காதலியிடம் !”

++++++++++++++

காலி•பின் கல் மனதைக்
கலக்கி விட்டாள் அந்த கன்னி !
மறைந்திடும் மின்னல் போலவன்
மாபெரும் பேரரசு !
உன் காதல்
உறைந்து போனால்
என் அறிவுரை இதுதான் :
உனக்குரியவை மறையும் வேளை
கனவாய்ப் போகும் !
கர்வம் தணியும் !
மீசை வழியே நீங்கும் மூச்சு !
கொன்று விடும்
உன்னை அந்த இழப்புகள் !

+++++++++++++

“எதுவும் நிலைப்ப தில்லை”,
என்று உரைப்போர்
சிலர் உள்ளார் !
அது தவறான கருத்து
“வேறோர் உண்மை இருக்கு மானால்”
நானதைக் கேட்டி ருப்பேன்,
எனக்குத் தெரியாமல்
எதுவும்
இருக்க முடியாது !

++++++++++++++

சங்கிலித் தொடர் விளைவு
சிறுமிக்குப்
புலப்படாது போனால்
விலக்கத் தேவை யில்லை
வாலிபர்
மூல காரணங் களை !
காதல் நிலவி இருப்பதைக்
காரணக் கர்த்தாக்கள்
தாரணியில்
காண வில்லை யென்றால்
காதல் இல்லை யெனப்
போதிக் காதே !

+++++++++++++

ஜோசப்பின் சகோதரர் காணார்
ஜோசப்பின் எழிலை !
ஆனால் ஜேகப்
அதைக் காணத் தவறிலார் !
மோசஸ் போதகர்
முதலில் தனது
மரப்பாச்சிச் சீடரைக் கண்டார் !
அடுத்துச் சிலநாள் கண்ணோக்கில்
கடிக்கும் விரியன் கண்டார் !
கலவரப் பீதியின்
காரணம் அறிந்தார் !
கண்ணுக்குத் தெரிவது
இதய உணர்வுக்கு முரணாகும் !
மோசஸின் கரம்
முறுக் கேறிய கரம் !
ஒளிவீசும் நித்திய விளக்கு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts