கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“நான் இறப்பதால் எனக்கு நேரும் இழப்பென்ன ? ஓர் உடலிலிருந்து வேறோர் உடலுக்கு உயிர் மாறுகிறது ! காமத் தாகத் தணிப்பு வேறோர் வீட்டு விருந்துக் கதையாகிறது. சூரிய வெளிச்சத்தில் புகழ்ச்சி அணுக்கள் மின்னுகின்றன ! நீ பற்றிக் கொள்ளும் நதிக்கரை நீரோட்டத்தில் உடைந்து போகிறது !”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

தளபத்திக் கேதும் புரியவில்லை !
மோர்க் குடத்தில்
வீழ்ந்த கொசுப் போல்
மூழ்கியது உள்ளம்
மோக த்தில் சிக்கிக் கொண்டு !
வேகமாய்ச் சொல்வான்
தளபதி :
“எழில் பெண்ணே !
என்னைப் பற்றி
எதுவும் சொல்லி விடாதே
காலி•ப் மன்னரிடம்.”
கன்னியின் கவர்ச்சி பட்டதும்
காலி•ப் இதயம்
மேலும் கீழும் ஆடியது !
நினைத்தை விடப்
பாவை எழில் மேனி
முதன்முதல்
பார்வை யில் தெரிந்தது
நூறு மடங்காய் !

++++++++++++++

குருநாதர் ஒருவரிடம்
கேள்வி கேட்டான்
ஒரு மனிதன் :
“எது மெய் ? எது பொய் ?
என்றெனக்கு உரைப்பீர் குருவே !”
குருநாதர் சொல்வார் :
“பொய் இதுதான் !
பரிதி யிடமிருந்து வௌவால்
பதுங்கிக் கொள்ளும் !
கதிரோன் என்னும் வடிவக்
கருத்தி லிருந்து அல்ல !
காலி•ப் என்னும் சொல்தான்
பயத்தைப் புகுத்தி
பாதாளக் குகைக்குள்
பதுங்க வைக்கும் தளபதியை !
பகைவர் சிக்கிட எழிற்
பாவையை
பணையம் வைப்பார் சதிகாரர்
தூண்டி முள்ளில் !

+++++++++++++

உள்ளொளி வீசிடும்
உன்னதப் போதகர் மோசஸ்
சினாய் மலை உச்சியில்
ஒளி எழச் செய்தார் !
ஆயினும் குன்றின் மீது
ஒளி விளக்கு
நிலைத்து எரிய
இயலாமல் போனது !
ஏமாற்றிக் கொள்ளாதே
உன்னை !
வெறும் சிந்திப்பு
மெய் வாழ்க்கை ஆகாது !
போர் எண்ணம் உனது
வீரம் ஆகாது !
சிந்தனை
செவியி லிருந்து
செங்கண்ணில் பொங்கி எழ
செயற்பட வேண்டும் நீ !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts