கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண் பெண் காதல் உறவு
************************************

“காமத் தாகத்தை எப்படித் தீர்த்துக் கொல்வது ? காம சக்தியே நில்லாமல் நம்மை நடத்தியும் இயக்கியும் வருகிறது. இறைவனுடன் ஐக்கியமாகத் தொடர்ந்து மலர்கிறது. நம்மைக் கவரும் அழகுத்துவம் நம்மை முடுக்கிச் செயற்படுத்த இயக்குகிறது.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

ஈருடல்கள் ஒன்றாக
இணைந் திடும் போது
வேறொன்று காணா உலகிலிருந்து
புதிதாய்ப் பிறக்கிறது
சிசு கலையா திருந்தால் !
இரண்டு மானிடம்
காதல் உறவிலோ
வெறுப்பிலோ கலந்து ஐக்கியம்
மூன்றா வது ஒன்றை
ஈன்று விடும் !
அப்படித் தோன்றிய அத்தீவிர
ஐக்கிய உடல் உணர்ச்சி
ஆன்மீக உலகிலே
தோன்றிடும் அற்புதம் !

++++++++++++++

போகுப் போது ஆங்கொரு
புதுமையைக் கண்டு பிடிப்பாய் !
உனது கூடுறவுகள்
உண்டாக்கும் பின் வாரிசுகளை !
கவனமாய் இரு ஆதலால் !
காத்திரு !
சுய உணர்வோடு
எவரையும்
காணச் செல்லும் முன்பு
நீ குழந்தைகளை
நினைவில்
வைத்துக் கொள் !

+++++++++++++

குழந்தைகளை நீதான்
வளர்க்க வேண்டும்
உன் உறவில்,
உன் உணர்வில் பிறந்ததால் !
உருவோடு,
உரையாடத் தேவை
ஓரிடம் !
உன்னை நோக்கி
அழுகின் றன உனது
குழந்தைகள் :
“மறந்து விட்டாய்
நீ எம்மைக் காண
திரும்பி வா.”
கவனம் வை இப்புகாருக்கு !
ஆடவனும் மங்கையும்
கூடுவது
ஆன்மீக நியதி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 1, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts