கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?
************************************

“அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற செயலைச் செய்யாமல் இருக்கிறான் ஒரு சிறுவன் என்பது ஆபத்தானது. அதாவது அச்சிறுவன் சிறகுகளின்றிக் கூட்டை விட்டு வெளியே ஏகுகிறான் ! ஒரே பாய்ச்சலில் விலங்கு ஒன்றுக்குப் பிறகு இரையாகிறான்.”

கவிஞானி ரூமி (ஒழுக்கமற்ற செய்கை புரிந்தவனைப் பற்றி)

+++++++++++++

வயல் நிலம் செழிப்பாக
உயரு தென்று
பயிரை வித்திடுவான்
அந்தத் தளபதி ! அன்றிரவு
கண்ட கனவில்
காதலி தோன்றினாள் !
காம மயக்கத்தில்
போலிப் பெண் காட்சியைப்
புணர்ந்தான் !
விந்தணுக்கள் வெளியேறும் !

++++++++++++++

சிறிது நேரம் கழித்து
விழித் தெழுந்தான் தளபதி !
காதலி
கண்முன் இல்லை யெனக்
கவலை யுற்றான் !
வித்துக்கள்
வீணாகி விட்டதாய்
வேதனை யுற்றான் :
“சோதனை செய்வேன்
சூழ்ச்சி மாதினை” என்று
சூளுரைத்தான் !

+++++++++++++

உடல் இச்சையை
அடக்கு முடியாத
ஒரு தளபதி
தலைவனாய் இருக்கச் சிறிதும்
தகுதி யற்றவன்
நிலத்தில்
வீணாய் விதைத் தவன் !
காலி•புக்கு அஞ்சாது
கட்டுப் பாடும் இல்லாது
சாவ தற்குத் துணிந்து
காதல் வயப் பட்டான்
மோகத் தளபதி !

++++++++++++++

ஆத்திரப் பட்டுச் செய்தலும்
அவசரப் பட்டுச் செய்தலும்
ஒருபோதும் கூடாது !
குருநாதர் ஒருவரிடம்
அறிவு பெறச்
சரண் அடைவாய் !
ஆனால் தளபதி யானவன்
ஏதும் செய்ய
இயலாத நிலை !

++++++++++++++

எழில் பெண்ணிடம்
இதயம் இழந்த
இந்த ஈடுபாட்டு மையல்
சரியில்லை !
உடன் படாத காதலியின்
உருவம் மறுபடியும்
வந்து வந்து தவிக்க வைக்கும் !
இருட் டுருவாய்
எதிர்ப்படும் கிணற்றில் !
சிங்கத் தையும் ஏமாற்றி
குதிக்க வைக்கும் குழியில்
போலிப் பிம்பம் !

++++++++++++++++

மேலும் ஓர் அறிவுரை
உனக்கு !
உன்னரும் காதல் மாதுடன்
உறவு கொள்ள
அடுத்தவர்
ஆழ்ந்து நோக்குவது
ஆபத்தானது !
பஞ்சும் நெருப்பும்
பற்றி எரியும்
பக்கத்தில் இருந்தால் !
எரியும் தீயை அணைப்பது
எளிதன்று !
இயலாத ஒன்று !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 25, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts