கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?

************************************

காதலர் விரைவாய் ஒருவரை ஒருவர் நாடுவது, முனிவர்கள் உலக மெய்ப்பாடைத் தேடுவது எல்லாம் இறைவனால் வழிகாட்டப் படுபவை. ஒவ்வோர் மனித ஈர்ப்பும் நம்மை அறிவுக் கடலுக்கு இழுத்துச் செல்கிறது. எவ்விதம் வாழ்வு அமைந்து வருகிறதோ அப்பாதையிலே செல்ல வேண்டும். அப்படி முயலாது சிக்கிக் கொண்டு முடங்கிப் போவது இயற்கை நியதி ஆகாது !

கவிஞானி ரூமி

+++++++++++++

எகிப்து நாட்டின் காலி•ப்*
மெய்க் காப்பாளன் கூறுவான் :
“மோசுல் வேந்தருக்கு
மேனி எழிலான
மோகக் கிழத்தி ஒருத்தி
இருக்கிறாள்.
என்னால் எழிலை வர்ணிக்க
இயலாது !
இப்படி இருப்பாள்,” என்றவன்
ஒரு தாளில்
ஓவியம் வரைந்து காட்டினான் !

++++++++++++++

காலி•பின் கைதவறிக் கீழ்விழும்
ஒயின் கிண்ணம் !
தன் தளபதியை மோசுலுக்கு
உடனே அனுப்பினான்
படைவீரர்
பல்லாயிரம் சூழந்து செல்ல !
முற்றுகை இட்டார் ஒருவாரம்
செத்தனர் படைவீரர்
கோட்டைச் சுவர் இடிந்தது !
கோபுரங்கள் சாய்ந்தன !
“ஏனிந்த சாவுகள்,” என்று அலறி
தூதனை அனுப்பினார்
மோசுல் வேந்தர்.
“நகரம் வேண்டு மெனின்
நான் தருவேன்
எடுத்துக் கொள்வீர் !
ஆபரணம் வேண்டு மெனின்
அதுவும் அளிப்பேன் ! போர்
அவசிய மில்லை !”

+++++++++++++

தாளில் வரைந்த எழில்
மாதின் ஓவியத்தைத்
தளபதி காட்டினான்
மோசுல் வேந்தருக்கு !
தயங்க லின்றிக்
“கூட்டிச் செல் அவளை”
என்று உடனே
அனுமதி கொடுத்தார் !
“எழில் மாதை வழிபடுவோன்
தழுவிக் கொள்ளட்டும் !”
மோகினி
மாதைக் கண்டதும்
மயங்கி வீழ்ந்தான் தளபதி !
காதல் வயப் பட்டான்
காலி•பைப் போல் !

++++++++++++++

திடீர்க் கவர்ச்சியும்
முடிவிலாக் காதல் உணர்வின்
ஓர் ஆரம்பக் காட்சியே !
உலகம் வளர்ந்து வாராது இந்த
உணர்ச்சி யின்றி ?
ரசாயன மாற்றம் அடைந்திடும்
அண்டப் பொருட்கள்,
காய்கறிப்
பயிர்களி லிருந்து !
உயிர் பிணையும் உடலோடு
ஒவ்வோர் காதல் உணர்விலும்
மானிடம்
முழுமை அடையத் தான்
விழையும் போது !

+++++++++++++++
*காலி•ப் –> Caliph
+++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 19, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts