கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பயம் உன் தொண்டையை
இறுக்கும் படி
விட்டு விடாதே !
இடையே
இராப் பகலாய்
மூச்சை இழுத்து வா
மரணம் உன் வாயை
மூடுவ தற்குள் !

++++++++++++++

சர்க்கரை கரைவதைப் போல்
உருக்கி விடு என்னை
தருணம் அது வென்றால் !
மிருதுவாய்ச் செய்
கையால் தடவியோ அல்லது
கண்ணோக் கிலோ !
காலைப் பொழுதில் அனுதினமும்
காத்தி ருப்பேன்
இதற்கு முன்பு அவ்விதம்
நேர்ந்தது போல் !
தீர்த்துக் கட்டுவது போல்
திடீரெனக் கொல் !
இல்லா விடில்
எப்படி நான்
இறக்கத் தயாராய் இருப்பது ?

+++++++++++++

உடலின்றி மூச்செடுக் கிறாய்
தீப்பொறி போல் !
ஏங்கி வேதனை அடைகிறாய்
நீங்குதென் மனப் பாரம் !
கை அசைத்து என்னைக்
காத தூரம் தள்ளி
நிறுத்து கிறாய் !
தூரத்தில் என்னை வைப்பதால்
ஈர்க்கப் படுகிறேன் !

++++++++++++

வெளுத்த பகல் வேளை !
வெள்ளை மதில் சுவர் !
காதல் தேயுது !
வெளிச்சம் மாறுது !
எண்ணத்தை விடவும்
எனக்கு மிகவும் தேவை
நளினம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 10, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts