கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு முத்தமிட்ட பிறகு, நன்னெறி நூலிலிருந்து ஒரு வரியாவது எடுத்து நீ உச்சரித்தாயா ? மரணம் உன் செவிகளை அடைத்த பிறகு வாழ்க்கையின் கீதத்தை ஒரு கணமாவது நீ கேட்டாயா ?

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

உயரத்தில் நம்மைத் தூக்கும்
இந்த வாழ்க்கை !
ஓரிடத்தி லிருந்து
வேறோர் இடத்துக்கு நம்மை
ஏற்றிச் செல்லும் !
ஒரு புள்ளியி லிருந்து
அடுத்த புள்ளிக்குத்
நகர்த்தும் ஊழ்விதி நம்மை !
இந்த இரட்டைக்கும்
இடையே
சிக்கியுள்ள நமக்குச்
செவியில் கேட்கின்றன
பயங்கரக் குரல்கள் !
இடையூறு
தடை யீடுகள் மட்டுமே
நம் கண்ணில் படும் !

+++++++++

எழிலரசி தன்னைக் காட்டுவாள்
நமக்கு அவள்
புகழ் ஆசனத்தின் மேல்
வீற்றிருக்கும் போது !
ஆயினும்
நாமவளை நெருங்குவது
காம இச்சை யால் ! அவளது
தூய்மைக் கிரீடத்தை
அபகரித்து நமது
தீய செயலால் அவள்
ஆடையை
அசுத்தப் படுத்திவோம் !

+++++++++++

காதல் பணிவாக
நம்மருகே உலவு கிறது
ஆயினும்
நாமதை விலக்கி ஓடுவோம்
நடுக்க முடன் !
இருட்டினில் நாம்
ஒளிந்து கொள்வோம் !
அல்லது
அழகினைப் பின் தொடர்வோம்
அவமானப் படுத்த !

+++++++++++

காதல் பாரம் உள்ளத்தை
அழுத்தும் போது
அறிவில் உயர்ந் தவரும்
சிரம் தாழ்த்துவர்.
அழகோ
மென்மை மிகுந்தது
லெபனானில் விளையாடும்
தென்றல் போல் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 11 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts