கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எனது தீய பழக்கம் :
கூதற் காலத்தில் பொறுமை இழந்து
பாதகம் செய்வேன்
என்னோடு இருப்போ ருக்கு !
நானில்லா விட்டால்
நகலாது எதுவும் இங்கே !
தெளிவான சிந்தனை எனக்கில்லை !
மொழிகளில் முரண்பாடு
அவிழ்க்க இயலாத
முடிச் சாகப் போகும் !
மாசுற்ற நீரை
தூய தாக்குவ தெப்படி ?
ஆற்றில் மீண்டும் ஊற்றி விடுவதா ?
தீய பழக்கத்தை
நல்லதாய் மாற்றுவ தெப்படி ?
என்னைத் திரும்பவும்
உன்னிடம் அனுப்பி விடுவதா ?

++++++++++++++

நீர்ச்சுழிலில் சிக்கும் போது
நீரை
ஈர்த்திடும் கடலடி மட்டம் !
நம்பிக்கை யற்றுக்
காயப் படுத்துவோர்
நலமடைய
ஓர் இரகசிய மருந்துள்ளது !
நீ நேசிக்கும் நண்பனை
நெடுங்காலம் நினைத்துக் கொள்
உன்னை விட்டு அவன்
நீங்கி னாலும் சரி இல்லை
உன்னை அவன்
நெருங்கி னாலும் சரி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 4, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts