கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கண்ணில் படாமல் போனது
தோட்டம் உனக்கு !
காரணம்
அத்திப்பழம் வேண்டும் என்கிறாய்
எந்த மரமாய் இருப்பினும் !
எழிற் பெண்ணை நீயும்
சந்திக்க மாட்டாய் !
நகை யாடி வருகிறாய்
நரைத்துப் போன கிழவியுடன் !
பல்லாயிரம் பறவை இனம்
உள்ளது !
அழுகை உண்டாகும் எனக்கு
புழுத்த வாயோடு
மாடி மதில் மேல்
தலை வைத்துக் கீழ் நோக்கும்
கிழவி உன்னை
அழைத்து நிறுத்தி வைத்தது !
மடிப்பு மேல் மடிப்பு
படிந்த அத்திப் பழத்தில்
சுவை யில்லை !
காய்ந்து அழுகிக் கூடான
வெள்ளைப் பூடு !

++++++++++++++

இறுக்கிப் பிடிக்கிறாள் தோல்
இடுப்பணியில்* !
பூவும் இல்லை, பாலும் இல்லை
மூதாட்டி உடலில் !
முகத் தோற்றம் எப்படி
இருக்கும் என்று அறிந்திடத்
திறக்கும் உன் கண்களை
மரணம் !
கரிய முதலை ஒன்றின்
முதுகுக் தோல் அது !
இதற்கு மேல் இல்லை
என் புத்திமதி !
மௌனமாய்
உன்னை இழுத்து செல்லட்டும்
உறுதியாய் நீ
காதலிக்கும் ஒன்று !

***************
*தோல் இடுப்பணி — Leather Belt

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 21, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts