ஆங் சான் சூ கீ

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


தலையிலே மல்லிகை
முகத்திலே புன்னகை
அவர்தான் ஆங் சான் சூ கீ

நவ 13, 2010
வீட்டுக் காவலிலிருந்து விடுதலை

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

மியான்மார் இன்று
மழையால் மணக்கிறது

ஆரம்பக் கல்வி புதுடில்லியில்
அடுத்த கல்வி ஆக்ஸ்ஃபோர்டில்

அவரிடம் சில கேள்விகள்

உயிராக மதிக்கும் தலைவர்?
மகாத்மா காந்தி

பொதுவாழ்வில் உங்களை
பொத்திக் கொண்ட சக்தி எது?
மகாத்மா காந்தி

உயிர்க் கொள்கை?
அகிம்சை
வேறு வழியே இல்லாத போது
ஒத்துழையாமை

நீங்கள் எழுதிய புத்தகங்கள்?
‘பர்மாவைச் சுற்றிப் பார்ப்போம்’
‘பர்மிய இலக்கியங்களில்
அரசியல் சமுதாய தாக்கங்கள்’
‘அச்சத்திலிருந்து விடுதலை’

தாங்கள் வாங்கிய விருதுகள்
1990 ரப்லோ மனித உரிமை விருது
1991 சக்ரோவ் விருது
1991 அமைதிக்கான நோபல் விருது

நோபல் பரிசை நேரில் பெற்றீர்களா?
தனிமைச் சிறையில் இருந்தேன்
என் சார்பில் என் மகன்கள்

நீங்கள் வழங்கிய கொடை?
நோபல் பரிசு 1.3 மில்லியன்
பர்மியர் வளர்ச்சிக்கான அறநிதிக்கு

வீரத்திருமகளை
வீட்டுக் காவலில் வைத்ததேன்?
வார்த்தைகள் சொல்ல முடியாததை
வலைத் தளங்கள் சொல்லும்

தங்களால் மறக்க முடியாதது?
எல்லை வரை வந்தும்
என்னைப் பார்க்க முடியாமல்
என் கணவர் துடித்தது
பின் மடிந்தது

உங்கள் விடுதலை பற்றி?
என்னோடு சிறைப்பட்ட
2100 பேர் இன்னும் உள்ளேதான்
என்னைப் பொருத்தவரை
இது விடுதலை அல்ல

நீங்கள் பர்மிய மக்களுக்குச்
சொல்ல விரும்புவது?
அகிம்சை
பொறுமை
உண்மை

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

author

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts