கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவி கூறிய பதில் :
++++++++++++++++++

என்னிடம் பேசாதீர்
உன்னத நிலையைப் பற்றி !
எப்படி நடிக்கிறாய்
என்று பார் !
அனைத்திலும் ஈனத்தனம்
ஆன்மீகத் திமிர் !
ஆடைத் துணி ஈரமாகிப்
பனிப் பொழிவாகிக்
குளிரில் நடுங்கும்
நாளைப் போன்றது இது !

++++++++++++++

என்னால் பொறுக்க இயலாது
இதனை !
நானுனக்கு
இணையானவள் என்று நீ
அழைத்திடாய் !
நீ யொரு ஏய்ப்பாளி !
நாய்க ளுடன்
எலுப்புத் துண்டுக்குச் சண்டை
இடுவோன் நீ !

++++++++++++++

பாவனை செய்வது போல்
நீ திருப்தி அடைய வில்லை !
நீ ஒரு பாம்பாட்டி !
அதே சமயத்தில்
நீதான் பாம்பும் ! ஆனால்
நீ அதை
அறியா தவன் !
பாம்பிடம் மகுடம் ஊதுவாய்
பணத்துக் காக !
பாம்பும்
மகுடம் ஊதும் உனக்கு !

+++++++++++++

இறைவனைப் பற்றி நீ
ஏராளமாய்ப் பேசி
குற்ற உணர்வை எனக்கு
உண்டாக் குவாய் !
எச்சரிக்கை செய்வேன் !
இறைவன் எனும் சொல்லைச்
சொல்லிச் சொல்லி
நெஞ்சை நஞ்சாக்கும்
நீ என்னை
ஆட்டிப் படைக்க
நினைத்தால் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 6 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts