மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++
+++++++++++++++++++++
“நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது. நாம் இப்போது சூரியனை உற்று நோக்கிக் கடலின் கானங்களைக் கேட்கிறோம். சூறாவளியைத் தவிர வேறு எதுவும் நம்மை அசைப்பதில்லை.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++++++++
ஏகாந்தக் கடலிலே
வாழ்வெனப் படுவது
ஓர் தீவு !
நம்பிக்கை தான் தீவின்
பாறைகள் !
கனவுகள் தான் தீவின்
மரங்கள் !
மலர்கள் தான் தீவின்
தனிமை சுகம் !
நீரோடைகள் தான் தீவின்
தாக எழுச்சி !
+++++++++
எனது சகத் தோழனே !
உனது வாழ்வும்
ஒரு தீவுதான்
மற்ற எல்லாத் தீவுகளும்
மாநிலங் களும்
பிரிந்து போய் உள்ளன
உன் தீவை விட்டு !
உன் கடற்கரை யை விட்டு
அடுத்த தீவுக்கு
எத்தனை கப்பல் ஏகினாலும்
உன் துறைமு கத்தை
எத்தனை கப்பற்படைக் குழுவினர்
தொட்டுச் சென்றாலும்
நீ ஏகாந்தத் தீவில் தான்
நிலைத்தி ருப்பாய்
நிம்மதி யின்றித்
தலை நோவுடன்
இனிய வாழ்வுக்கு ஏங்கி !
உன் சகத் தோழர்
உன்னை அடையாளம் காணார் !
புரிந்து கொள்ளார் !
அனுதாபப் படார் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)
- செந்தமிழ் நகர்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19
- இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்
- “பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“
- நட்பாராய்தல்
- பெண்கள் சந்திப்பு 2010
- கடைசி வேட்டை
- நிலா இரவு!
- மகிழ்வின் நிறம்..
- சட்டென ஒரு மழையிரவு:
- மிதித்தலும் மன்னித்தலும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே
- எண்ணப்பிழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி
- சிவப்பு மின்மினிகள்
- ஆன்மாவின் ஈடேற்றம்
- வைதேகி காத்திருப்பாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7
- காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்
- முகடுகள்
- பரிமளவல்லி 23. அகல்விளக்கு
- முள்பாதை 58
- நினைவுகளின் சுவட்டில் – (58)
- ஆங் சான் சூ கீ
- 64 துண்டுகள்..
- உயிர்
- கிளைகளுக்கிடையேயான ஒளிவெளியில் தொங்கும்கனி
- குழி
- நிர்வாண வார்த்தைகள்
- சிந்தனை
- அவனறியா பொழுதில்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக(A Light Unto The Nations)