கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++++++

எத்தனை நாட்கள் பணமின்மை பற்றி
இப்படிப் புகார் செய்வாய் ?
வக்கில்லாத போக்கைச் சொல்லி
வசை பாடுவாய் ?
வாடிய நாட்கள் பெரும்பாலும்
ஓடிப் போயின !
ஓயப் போகும் இந்த
மாறும் நிலை எண்ணிச்
சீறுவது ஏன் ?
விலங்கினம் எப்படி வாழுதென்று
சிந்தித்துப் பார் !
கிளையில் அமர்ந்து
களிப்போ டுள்ளது புறா !
கான மழை பொழியுது
கருங்குயில் !
மின்மினியும் யானையும்
படைத்தவன் மீது
நம்பிக்கை வைக்கும்
தம் உணவுக்கு !

++++++++++++++

நீ படும் இடர்களே உனக்கு
நெறி கூறும் போதகர் !
கேள் அவற்றைக் கவனமாய் !
இனிமை யாக்கு துயர்களை எல்லாம் !
ஏறக் குறைய
காரிருள் நீங்கி விட்டது !
ஒருமுறை வரும் இளமையின் போது
திருப்தியாய் இருந்தாய் !
அதிருப்தியில் இப்போது
அவதிப் படுகிறாய்
எல்லா வேளையும் !
செல்வத்தில் புரண்டாய்
ஒரு காலத்தில் !
செழித்த முந்திரிப் பழமாய்
மிளிர்ந்தாய் !
அழுகிப் போன பழம் நீ
இப்போது !
இனிமை படிப் படியாய் உயர
வளர வேண்டும் நீ !
தீயவளாய்
நீ மாறி விட்டாய் !
மனைவி யான நீ
இணை யானவள் எனக்கு !
இரட்டைச் செருப்பில்
ஒரு செருப்பு
இறுக்கமாய் இருந்தால் பயனின்றி
இரண்டும் வீணாகும் !
இணையாய்ப் பொருந் தாத
இரு கதவுகள் நாம் !
ஓநாயுடன் புணராது
ஒரு சிங்கம் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts