சத்யானந்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

சத்யானந்தன்


1.வேறெங்குமில்லை

தோல் தோலின் நிறம்
அடையாளமாய் உரைகல்லாய்
பச்சோந்தித் தோலை
பாம்புச் சட்டை போல்
அணியாவிட்டால் நிர்வாணம்

நிறம் சுமக்கும் துணிகளாய்
சில கொடிகள்
அதிகாரத்தின் தூண்களாய்ப்
பல கொடிக்கம்பங்கள் உயர
கீழே குடுக்கைகளாய் குடி
யிருப்புகள் உள்ளீடற்று

சிலம்பம் ஆடுபவன்
கொம்பின் ஒழுங்கில்
க்ழைக்கூத்தாடியின் பாதச்
சமனிலையில் குழையும்
விசித்திர வெண்மை
வெயில் காய்த்த வியர்வையில்
வெளிப்படும் வேறெங்குமில்லை.

2.நெடுஞ்சாலை

என்றேனும் நீயே வருவாயா
நீ இருக்கும் திசை எது
தெரியவில்லை

உன்னைத் தேடுவோர் மௌனியோ
எலிப்பொறிக்குள் ரணமானாரோ
கேட்க ஏதில்லை.

நீண்ட பகல்களும் ஒருமையான
இரவுகளும் ஏனோ போதவில்லை
நெடுஞ்சாலை வளர்ந்து கொண்டே
போகிறது

காற்றில் அலையும் ஒரு
வான் கோழி இறகும் ஒரு
விக்கிரகத்தின் அலங்காரமாய்
மயில்பீலியும் தான்
தென்பட்டன என் சலனங்களில்

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts